Latest News

August 08, 2016

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்
by admin - 0

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில் கூடிய கவனம் செலுத்திட வேண்டும் என இன்று (ஞாயிற்றுக் கிழமை) யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் பி.லக்ஷ்மன், ரீ.வசந்தராஜா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »

No comments