Latest News

July 14, 2016

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வாட்ஸ்ஆப்! அதிர்ச்சி தகவல்
by admin - 0

வாட்ஸ்ஆப் நிறுவனம் சில ஸ்மார்ட் போன்களில் இந்த ஆண்டோடு தங்களின் சேவையை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஸ்மாட்போன்களே கிடையாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அந்த அளவு வாட்ஸ்ஆப் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களில் தங்களின் சேவை நிறுத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகியது.

தற்போது இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியோடு சில பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்படாது. அதற்கான சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு படி, பழைய ஆண்ராய்டு போன்கள், விண்டோஸ் போன்கள், Symbian, BlackBerry ஆகியவற்றில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது.

BlackBerry, Nokia S40, Nokia Symbian S60, Android 2.1, Android 2.2, Windows Phone 7.1, iPhone 3GS/iOS 6 இந்த போன்களில் வாட்ஸ்ஆப் வசதி இந்த ஆண்டோடு முடிவுக்கு வருகிறது.

« PREV
NEXT »

No comments