Latest News

July 24, 2016

பொதுமக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டிருந்த வல்லூறுகளை அதன் கூட்டிலேயே தகர்த்த வெற்றி தாக்குதல் – இது வரை வெளிவராத தகவல்களுடன் சிறப்பு பார்வை
by admin - 0

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களை  தினமும்  கொன்று  குவித்துக்கொண்டிருந்த வல்லூறுகளை  அதன்  கூட்டிலேயே  தகர்க்க  வேண்டும் என்ற நோக்கில் இந்த   திட்டம்  தீட்டப்பட்டிருந்தது. இலங்கையிடம்  இருந்த மிக் மற்றும்  சுப்பர் சொனிக்  விமானங்களை  அழிக்கும்  ஏவுகணைகளை  புலிகள்  பெற்றிருக்கவில்லை. இந்த  தாக்குதல் மிக நீண்ட  கால திட்டமிடலின் அடிப்படையில்  நடத்தப்பட்டது என்று  அந்நேரம்  வெளியான  செய்திகள் கோடிட்டு  காட்டின. தமிழ் பொது மக்களை கொன்றழிக்கும் விமானங்களை அழிப்பதனை முதன்மையாக கொண்ட  இந்த  தாக்குதலில்  இலங்கையில்  பொருளாதரத்தை  முடக்குவது  என்ற  அம்சமும்  உள்ளடக்கப்பட்டிருந்தது. அந்த திட்டத்தின்  அடிப்படையிலேயே இராணுவ  விமானகள்  தவிர்ந்த இலங்கைக்கு  சொந்தமான “எயார் பஸ்” களும் கரும்புலிகளால் தகர்க்கப்பட்டன.

இந்த  தாக்குதலின்  மிகச்சிறப்பு  என்னவென்றால் இலங்கையின்  மையப்புள்ளியில்  புலிகள்  தாக்குதல் நடத்தினர்  என்பதோடு முப்படையும்  சேர்ந்து செயற்பட்டும் 14 கரும்புலி  மறவர்களின் தாக்குதலை  கட்டுப்படுத்த  முடியவில்லை என்பது தான். கரும்புலிகள்  கொண்டு  சென்ற  வெடிமருந்துகள்  தீர்ந்த பின்னர்  அவர்களாகவே தங்களை வெடித்துக்கொண்டனர் – அதுவும் தனியாக  அல்ல  விமானங்களுடன்  சேர்ந்து .

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.

தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.

அன்றைய  திகதியில் புலிகளின்நாதத்தின்  சார்பு  ஊடகமான  ஈழநாதத்தில்  வெளியான  இழப்பு விபரம் இது . ஆயினும்  பின்னாளில்  இலங்கையில்  பாதுகாப்பு ஆய்வாளர்  இக்பால்  அத்தாஸ்  குறிப்பிடுகையில்  இழப்பின்  அளவு  இதை  விட  பல  மடங்கு  அதிகம்  என்றும்  அவை  மறைக்கப்பட்டு  விட்டதாகவும்  குறிப்பிட்டு  இருந்தார்.  நேரடி  இழப்பினை  விட  பல் நூறு  மில்லியன்களை  மறைமுக  எதிர்கால  இழப்புக்களை  ஏற்படுத்தியதாக  இந்த  தாக்குதல்  குறித்து  விவரித்திருந்தார்.

இந்த  தாக்குதலின்  அச்சத்தின்  விளைவே  புலிகளுடன்  பேசியே  தீர்வு  காண வேண்டும்  என்ற  எண்ணத்தை   சிங்கள  அரசுக்கு  ஏற்படுத்தியது  என்பதில் எதுவித  சந்தேகமும்  இல்லை என்று  சிவராம்  தராகி  என்ற  ஆய்வாளர்  எழுதியிருந்தார்  அந்நேரம் . வரலாற்றில்  இதுபோன்ற  தாக்குதல்களை  போராட்ட  அமைப்புக்களிடமிருந்து கண்டதில்லை என்பதால்  உலக நாடுகள்  அனைத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது  என்றும்  அவர்  குறிப்பிட்டிருந்தார்.

இந்த  மாபெரும்  வரலாற்று  தாக்குதலில்  ஒரு பொதுமகன்  கூட சாகவில்லை என்பதை ஒரு  அதிசயமாக  உலக நாடுகள்  பார்த்தன. ஏனெலில் இராணுவ  விமான நிலையத்துடன்  இணைத்தவாறே இலங்கையின்  முதன்மையான  விமான நிலையம்  அமைக்கப்பட்டிருந்தது . அங்கு  தினமும்  அனைத்து  நாடுகளின் விமானங்களும்  வந்து செல்கின்றன. பல்லாயிரம்  மக்கள் பயணிக்கும்  இடமாக  இருந்தும்  ஒரு  பொது மகனுக்கு சிறு  காயம்  கூட ஏற்படாதவாறு எவ்வாறு  துல்லியமாக  திட்டமிட  முடிந்தது என்ற  கேள்வி மிகப்பெரிய அளவில்   இராணுவ  வல்லுனர்களால்  எழுப்பட்டது .

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை

இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை

இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments