Latest News

July 23, 2016

உலகைக் குலுக்கிய 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இன அழிப்பு நினைவுகூறல் கூட்டம்
by admin - 0

3 வருடங்களின் முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைப் பலியெடுத்தும்

தமிழரின் பல கோடிக்கணக்கான உடைமைகளை சூறையாடி தமிழ் மக்களை இலங்கைத்

தீவின் தென் பகுதியிலிருந்து துரத்தியடித்த சிங்கள இனவாதம் காலத்திற்கு காலம் தன்

வடிவங்களையும் வியூகங்களையும் மாற்றிக் கொண்டு தமிழ் இனத்தைக் கருவறுக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றங்கள் வராத வரை 1956, 1958, 1977, 1983, 2009

இற்குப் பின்னும் இன அழிப்பு தொடரத்தான் போகின்றது. 1983 இல் தமிழருக்கான சரியான

பாதுகாப்புப் பொறிமுறை, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதன் பின்னர் வந்த

பல ஆயிரம் தமிழரின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். "NEVER AGAIN" என்று

அடிக்கடி கூறும் சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசினைக் கையாள்வதில் மீண்டும் மீண்டும்

தவறுகின்றது.

இக் கருப் பொருளை வலியுறுத்தி 1983 கறுப்பு ஜூலை நினைவு கூட்டம் ஒழுங்கு

செய்யப்பட்டுள்ளது.

இடம்: TRINITY CENTRE, EAST AVENUE, EASTHAM, LONDON E12 6SG

திகதி: 25 JULY 2016

நேரம்: 6:30 PM – 9:00 PM

அண்மையிலுள்ள நிலக்கீழ் தொடருந்து நிலையம்: EASTHAM (DISTRICT LINE)

PHONE: 02088080465, 078 1448 6087, 075 0836 5678

EMAIL: admin@tamilsforum.com, info@britishtamilsforum.org

TAMIL HOUSE, BROAD LANE, TOTTENHAM HALE N15 4AG

BRITISH TAMILS FORUM (BTF)
« PREV
NEXT »

No comments