Latest News

June 11, 2016

புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் சித்திரவதை! பிரித்தானியா
by admin - 0


வெளிநாட்டில் இருந்து வரும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை இராணுவத்தினாலும், பொலிசாரினாலும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது குறித்து தாம் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டவுரிஸ், இவை தொடர்பில் பிரிட்டிஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரித்தானிய தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று காலை பதினொரு மணியளவில் சந்தித்து கலந்துரையாடும் போது குறித்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் எடுத்து கூறப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற இளைஞரான வேலாயுதபிள்ளை ரேனுகரூபனை கைது செய்த பொலிசார், அவர் மீது விடுதலைப்புலி உறுப்பினர் என்ற குற்றச்சாட்டினை சுமத்தி கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி இருந்தனர். இதனால் முகம் மற்றும் கால்களில் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுமிருந்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் எடுத்துக்கூறப்பட்டு மற்றும் வவுனியாவில் நடைபெற்ற கைது சம்பவம் குறித்தும் கூறப்பட்டது இதன் போதே பிரித்தானிய தூதுவர் இது தொடர்பில் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சந்திப்பின் பின்னர் மேலும் கூறுகையில்; பிரித்தானியாவிலிருந்து தன்னுடைய திருமணத்துக்காக வந்த ஒருவர் கொடிகாமம் பொலிசார் கைது செய்து அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் முழு விபரங்களையும் தெரியப்படுத்தி இருந்தேன். ஆனால் இது தொடர்பில் உடனடியாக தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார்.

வவுனியாவில் ஒருவரை கைது செய்தமை சம்பந்தமாக தனக்கு தெரியும் என்றார். அது சம்பந்தாமாக தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் தமது நாட்டிற்கு மீள அழைப்பது குறித்து அவர் ஏதும் தெரிவில்லை. என தெரிவித்த அவர், ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை பூர்த்தி அடையும் எனவும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments