Latest News

June 15, 2016

இலங்கையில் மீண்டும் பதற்றம் ! பற்றி எரியும் கப்பல் ! ஆயுத கிடங்குக்கு அடுத்து.. இப்பொழுது கப்பல் எரிகிறது..
by admin - 0

இலங்கையில் மீண்டும் பதற்றம் ! பற்றி எரியும் கப்பல் ! வெள்ளம்.. ஆயுத கிடங்கு.. இப்பொழுது கப்பல் எரிகிறது..

தலைநகர் கொழும்பின் துறைமுகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மேலதிகமாக முப்படையினரின் உதவியும் அவசரமாக கோரப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினர், இராணுவம் மற்றும் துறைமுக தீயணைப்பு படையினரின்உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வடபகுதியிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கான நடைமுறைகளை சமகால தேசிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு சர்வதேசத்தின் கடுமையான அழுத்தம் காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நோக்கில் சிங்கள தேசம் இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஐயம் எழுந்துள்ளது.


« PREV
NEXT »

No comments