மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகவிழா-2016 ல் மேடையிடப்படவுள்ள நாடகங்களிற்கான பிரதி வழங்கு நிகழ்வு கல்லூரியின் முதல்வர் மே.இந்திரபாலா தலைமையில் 15.06.2016 இடம்பெற்றது.
இம்முறை கல்லூரியின் பழைய மாணவனும் நாடறிந்த நாடகவியலாளருமான கந்தையா-ஸ்ரீகந்தவேளின் நாடகப்பிரதிகள்வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மானிக்கர் இல்லமாணவர்களது நடிப்பில் எதிர்பார்ப்பநிஜந்தானா? சம்பந்தர் இல்லமாணவர்களது நடிப்பில் மீட்டும் நினைவுகள் வாகீசர் இல்லமாணவர்களது நடிப்பில் கருவறையிலிருந்து.... சுந்தரர் இல்லமாணவர்களது நடிப்பில் தேரார் வீதியில் ஆகிய நாடகங்கள் மேடையிடப்படவுள்ளன.
நிகழ்வில் நாடகவிழா இணைப்பாளரும் நாடகதுறை பொறுப்பாசிரியருமான எஸ்.ரி.அருள்குமரன் போட்டி தொடர்பானகருத்துக்களை குறிப்பிட்டார்.நிகழ்வில் பிரதி அதிபர், உபஅதிபர், பகுதித்தலைவர்கள் ,ஆசிரியர்கள் , இல்லப்பொறுப்பாசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.நாடகப்போட்டிகள் எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
No comments
Post a Comment