Latest News

June 18, 2016

உதயன் பத்திரிகை காரியாலயத்தில் சிறுமிமீது வன்புணர்வு - 15வயது சிறுமி தாயானார்
by admin - 0

உதயன் பத்திரிகை காரியாலயத்தில் சிறுமிமீது வன்புணர்வு  - 15வயது சிறுமி தாயானார்

கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிக்கை 
பணியகத்தினுள் இரவு வேளைகளில் அங்கு கடமையாற்றும் பணியாளர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகப்படுத்தி வந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு கிளிநொச்சியை சேர்ந்த இரு இளைஞர்களும் உடந்தையாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் அறியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

திருகோணமலையை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் தாய் தந்தையரை இழந்த நிலையில் தந்து பேத்தியுடன் கிளிநொச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

அச் சிறுமியை உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி காரியாலயத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் அவரது பாதுகவலர்களுக்கு தெரியாமல் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பாலியல் ரீதியாக துஸ்பிரயோகப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்த அவரது பேத்தியார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது சிறுமி ஐந்து மாதம் கர்பமாக உள்ள தகவல் தெரியவந்துள்ளது. 

சிறுமி கர்ப்பமடைந்ததையடுத்து, விவரம் அறிந்த சிறுமியின் மாமா, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடந்த 14 ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன்,சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கிளிநொச்சியிலுள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன், கிளிநொச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டார். சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை உத்தரவிட்டார்.   அதன்போது, சிறுவர் நன்னடத்தை அதிகாரியுடன் சென்ற சிறுமி நீதிவானின் அறையில் இரகசியமான முறையில் வாக்குமூலமளித்தார்.

இந்தச் சம்பவத்தில் குறித்த இளைஞனுக்கு துணையாக மேலும் இரண்டு இளைஞர்கள் செயற்பட்டதாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

இந்த செய்தி வெளிவந்தால் உதயன் ஊடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என அஞ்சிய அதன் நிர்வாகியும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் உடனடியாக களத்திலிறங்கி கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர்கள்மூலம் செய்தி வெளிவராதவாறு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கிங்டத்திற்கு (tamil kingdom)தகவல் தந்துள்ளார்.

இந்த செய்தியை எந்த  ஊடகங்களோ இதுவரை வெளியிடுவதை தவிர்த்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments