Latest News

May 08, 2016

பலியெடுக்கும் யாழ்தேவி - இன்றும் ஒருவர் பலி
by admin - 0



கிளிநொச்சி  பரந்தன்  புகையிரத நிலையத்திற்கு அருகில் ஞாயிறு பிற்பகல் 2.45 மணிக்கு இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 
உயிரிழந்தவர் கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த அனுசாந் வயது 24 என்பவர்என தெரிவிக்கப்படுகிறது 
 தொலைபேசியில் உரையாடியவாறு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட  வேளையே  இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
« PREV
NEXT »

No comments