வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் நாட்டினுள் ஆரம்பிக்க இடமளிக்க வேண்டாம் என கோரி, காணாமல் போனோர் குடும்ப ஒன்றியம் இன்று காலை ஸ்ரீலங்கா பிரதமர் செயலாளர் காரியாலயத்தில் மனு ஒன்றை கையளித்துள்ளது.
இவர்கள் இன்று காலை, தேசிய கலந்துரையாடல் அமைச்சகத்தின் முன் அமைதிப் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், அமைச்சர் மனோ கணேசனிடமும் கோரிக்கை மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திலும், ஐக்கிய நாடுகள் சபை காரியாலத்திலும் அவர்கள் இந்த கோரிக்கை மனுவை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அமைப்பினர் ஸ்ரீலங்கா பிரதமரின் செயலகத்திற்கு முன்பு அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தியதோடு மனுவினை கையளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment