Latest News

May 11, 2016

வின்ரதூர் ஈழத்து தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவிஸ் மக்களுக்கான நன்றி கூறல் நிகழ்வு
by admin - 0

கடந்த 08.05.2016 அன்று வின்ரதூர் மக்கள் தாயக்கத்திலிருந்து அகதிகளாக இங்கு அடைக்கலம் புகுந்த எமக்கு இடமளித்து அத்தருணத்தில் எமக்கான அனைத்தையும் செய்து எமக்கு வாழ்வளித்த சுவிஸ் மக்களுக்கு நன்றிகூறுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில்,தமிழர் கலாச்சார, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஆடல்,பாடல் நிகழ்வுகள் இடம்பெற்றது சிறப்பான நிகழ்வுகளாக அமைந்ததோடு சுவிஸ் நாட்டவர்களுக்கான அவர்கள் மொழி இசைநிகழ்ச்சி கூட ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.அத்தோடு எமது தாயக உணவு விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சுவிஸ் மக்களோடு சுவிஸ் நாட்டில் வசிக்கும் கணிசமான பலதரப்பட்ட நாட்டவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் அத்தோடு சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அமைப்பின் செயலாளரால் தாயகத்திலிருந்து ஏன் நாம் அகதிகளாக இங்கு வந்தோம்?இங்கு எப்படியான சூழலில் எந்த நிலையில் வாழ்கிறோம்? தாயகத்தின் தற்போதைய சூழ்நிலை, ஈழத்தமிழரவையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விபரிக்கப்பட்டது.

அதில் பங்குபற்றிய சுவிஸ் நாட்டவர்கள் தற்போதைய சூழ் நிலைகள் குறித்து விபரமாக கேட்டறிந்ததோடு எமது புலம்பெயர் வாழ்க்கை முறைமை மற்றும் நன்றியுணர்வும் குறித்து பெருமிதம் தெரிவித்தார்கள், நிகழ்வில் கலந்துகொண்ட எம்மக்களுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
சிறப்பாக இந்த நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்தி முடித்த வின்ரதூர் ஈழத்தமிழ் மக்களுக்கு எமது நன்றிகள்.
சுவிஸ் ஈழத்தமிழரவை








« PREV
NEXT »

No comments