நேற்றைய தினம்(10) பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், TCC அமைப்பு முள்ளிவாய்க்கால் சாட்சி நிகழ்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் கலந்துகொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலாளர் நடேசன் அவர்களின் மகன் பார்திபன் உரையாற்றி இருந்தார். அவர் உரையாற்றியதற்கு அப்பால், தனது அப்பாவுக்கு நடந்த சோகத்தை அப்படியே பாராளுமன்ற கட்டத்தினுள் கொண்டுவந்தார். என்னோடு தொடர்புகொண்ட எனது அப்பா. நான் இலங்கை ராணுவத்திடம் சரணடையச் செல்கிறேன். நான் இன்னும் 30 நிமிடங்களில் உனக்கு தொலைபேசியில் அழைப்பை விடுக்கவில்லை என்றால். நான் இறந்துவிட்டதாக அர்த்தம் என்று கூறியுள்ளார்.
அதுபோலவே நடந்துவிட்டது. எனது அம்மா, தங்கை மற்றும் சகோதரர் ஆகியோருடன் தான் எனது அப்பா சென்று வெள்ளைக்கொடியோடு சரணடைந்தார். அவரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது. என்று கூறி கண்ணீர் விட்ட பார்தீபனை , பல பிரித்தானிய MPக்கள் தேற்றினார்கள். அரங்கில் கூடியிருந்த பல தமிழர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். பல MP க்கள் கண் கலங்கியது. பேச முடியாது திண்டாடிய பார்தீபன் ஒருவாறு , தனது சாட்சியை பதிவுசெய்தார்.
இதில் பாரபட்சம் பார்காமல் , பல தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு , உரையாற்றியிருந்தார்கள். பல பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பி, தமது அறிவுத் தாகத்தை தீர்த்துக்கொண்டார்கள். எது எவ்வாறு இருப்பினும், முள்ளிவாய்க்காலில் நடந்த மனிதப் படுகொலைக்கு நிச்சயம் ஒரு நீதி தேவை என , பிரித்தானிய ஆளும் கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, எதிர்கட்சியான லேபர் கட்சி மற்றும் லிபரல் டெமொகிராட்ஸ் கட்சியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து கோரிக்கை விடுத்தார்கள். அதுவே மிகவும் முக்கியமான விடையமாக நோக்கப்படுகிறது.
No comments
Post a Comment