கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று உலகு எங்கிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
லண்டனில் நடந்த முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வானது தமிழீழ தேசியக்கொடி ஏந்திய தமிழர்களால் மிகவும் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது அத்துடன் அதில் பலநூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக தங்கள் அடையாளங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவு எழுச்சியை நினைவு கூறினார்கள்.
அதே இடத்தில் தமிழீழ தேசியக்கொடியை ஏற்றாமல் பிரித்தானிய தமிழர் பேரவை என்னும் அமைப்பும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நடாத்தியது. புலிக்கொடி ஏற்றுவதை பிரித்தானிய தமிழர் பேரவை அனுமதிக்கவில்லை இதனால் இரண்டு மேடைகளில் நினைவு எழுச்சி நடைபெற்றது .
தமிழ் மக்கள் தமிழீழ தேசியக்கொடியின் பின்னால் என்றும் அணி திரளுவார்கள் என்பது இந்த முள்ளிவாய்க்கால் நினைவு எழுச்சி நாள் எடுத்துக்காட்டியது. அதற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் இனிவரும் காலங்களில் ஒற்றுமையுடன் தேசியக்கொடியின் கிழ் மக்களை அணி திரட்டுவார்கள் என்பது பலரது எதிர்பார்ப்பு
No comments
Post a Comment