சன்னங்களையும், தகடுகளையும் தன் உடலில் தாங்கி வேதனையில் வாடும் முன்னாள் போராளி பிறையாளனின் வாழ்வு செழிக்குமா?
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை களமுனைப்போராளியாக பல களம் கட்டவர்தான் பிறையாளன் என்றழைக்கப்படும் நல்லையா யேசுதாசன்.
இலங்கை இராணுவத்தினரின் அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர்களில் பிறையாளனும் ஒருவர்.
தமது வாழ்க்கையை தியாகம் செய்து, உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், கட்டுப்படுத்தி இன உணர்வை மனதில் இருத்தி களமுனை கண்ட ஆயிரம் போராளிகளில் பிறையாளனின் பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் இன்று அவர் வாழ்வின் நிலை தான் என்ன?போராட்டத்தின் போது தனது ஒரு கண் பார்வையை இழந்து, தன் வாழ்க்கையில் துன்பத்தினை மட்டும் பரிசாகப் பெற்று துயரத்தின் மத்தியில் வாழ்ந்துவருகின்றார்.
முள்ளிவாய்க்கால் துயரத்தின் முடிவின் பின்னர், இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதலில் கணவரை இழந்த ஒரு பெண்குழந்தையுடன் வாய்பேச முடியாத நிலையில் யுவதி ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்த யேசுதாசனுக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இரண்டு குழந்தைகளையும் வளர்த்தெடுக்க முன்னாள் தமிழின காவலன் இன்று தவித்து வருகின்றார். தன் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்கையில், இன்று தன் பிள்ளைகளின் வாழ்வை சிறக்க வைக்க அவர் அதிகமாக சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
போரில் படுகாயமடைந்த பல போராளிகள் தங்கள் உடல் முழுவதும் வெடிச்சன்னங்களையும், தகடுகளையும் உடலின் ஒருபாகமாகவே சுமந்துவருகின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில் கண்பார்வையிழந்து வாடும் இந்த வீரர் இன்று தன் மக்களிடமே உதவிக்கரம் கேட்டு நிற்கின்றார்.
ஒரு தொகைப் பணம் முதலீடாக இருந்தால் போதும் என்னால் முன்னேற முடியும் என சூரியனை வணங்குவதைப் போல் என் அன்பு மக்களை வணங்குகின்றேன் என்கிறார் பிறையாளன்.
அவரின் வாழ்வு செழிக்க எமது மக்கள் உதவிக்கரம் நீட்டுவார்களா?
பிறையாளனின் தொடர்புக்கு,
PHONE, NUMBER : 0094774430561
ACCOUNT NUMBER : 040-2-001-4-0063490
NAME : JESUTHAS NALLAIYA
ADDRESS : PALAMODDAY,OLUMADHUNEDUNKERNI-99661
NIC,NO : 731834830
No comments
Post a Comment