தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.
தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள்.
பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில் , பல வழிகளை தன் வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள்.
போராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சசிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் நடத்தியமையாலும் மேலும் வேவுத் திட்டமிடளாலும் பெரும் மதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார். ஆயினும் மக்கள் மத்தியில் அறியாதிருந்தும் இப்படியான் ஓர் தளபதி உள்ளார் என்றும் வெளியில் தெரியா வெளிச்சமாக நாளும் தேசப்பணிகளைத் தொடர்ந்தார் .
பூநகரி – பலாலி – ஆனையிறவு – எல்லாளன் ( அனுராதபுரம் ) நடவடிக்கையில் இவரின் தேசக்கடமை முழு வீச்சுடன் விரிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும் தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறையில் – அவர் வழிகாட்டலில் வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்ப்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை. ஆயினும் விடுதலை சுவடுகள் என்றுமே உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் , பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் விடுதலைப் பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கணம் உணர்ந்து பாருங்கள் பின்வருமாறு விபரிக்கும் வேவுப்புலிகளின் வாழ்வியலிலிருந்து ….. !
தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் திட்டமிடலையும் வெற்றியையும் விளங்கிக் கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மறந்ததில்லை. ஆயினும் வெளிச்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை …
எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி !
தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு , மேன்மை மிக்கது உன்னதமானது !
தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல் தளர்ச்சியற்ற பிணைப்பு !
அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும் , எதிரியின் அரண்களுக்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும் , அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான்.
எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும் , மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரணுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது.
பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராரிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார்.
இன்றும் தமிழீழ தேசம் மாபெரும் தளபதியை இழந்து தவிக்கும் தவிப்பை உணர்ந்து நாளை ஆயிரம் ஆயிரம் சசிக்குமார்கள் உருவாகி அவர் விட்டுசென்ற பணியை ஏற்று தமிழீழம் மலர வைப்போம்.
நன்றி ஈழவிடியல்

No comments
Post a Comment