ஆப்பிள் நிறுவனம், ஐபோன் பெயரில் மொபைல் போன்கள் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஹேண்ட் பேக் தாயரிக்கும் நிறுவனமான ஜிண்டாங் டியான்டி, ஐபோன் என்ற பெயரை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டி ஆப்பிள் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராகத் தீர்ப்பு வந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சீனாவின் பெய்ஜிங் மாநகர நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களைக் கடந்த 2009-ல் சீனாவில் விற்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், ஐபோன் என்ற பெயரில் ஹேண்ட் பேக்குகள் மற்றும் மொபைல் போன் கவர்களைக் கடந்த 2007 முதலே விற்று வருகிறது என்று கூறி, சீனாவில் ஐபோன் என்ற பெயரை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டது. இது ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
No comments
Post a Comment