Latest News

May 04, 2016

ஆனந்தபுரத்தில் வீரர்கள் விட்டு சென்ற வாசகம் மீட்பு ஒன்றுபடுமா தமிழினம் ?
by admin - 0

விடுதலைப் புலிகளின் வெற்றி தோல்வியை தீர்மானித்த சமராக கருதப்படும் முல்லைத்தீவு ஆனந்தபுரச் சமர் நடைபெற்று ஏழு வருடங்களாகி விட்டன.

இந்நிலையில் இன்று அக்களப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சிக்கிக் கிடக்கின்றது.

2009ம் ஆண்டு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரச் சமரில் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் (கடாபி), பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உள்ளிட்ட தமிழீழ தேசிய  விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள், பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து வரலாறு படைத்துள்ளனர்.

தமிழீழ தேசிய  தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலை உளமார ஏற்று, கிழக்கு மாகாண போராளிகளும் சிறப்பாக ஆனந்தபுரச் சமர்க்களத்தில் களமாடி வீரகாவியமாகி உள்ளார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் அங்கே காணப்படுகின்றன.

மட்டு-அம்பாறை மாவட்ட நிதித்துறை வழங்கற்பகுதி வெளியிட்டு வைத்த 2006ம் ஆண்டு சிறிய நாட்காட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் “பொங்கி எழும் அலையாய் உன் பின்னால் உலகத் தமிழினம்- இனி தங்கு தடைகள் இன்றி தடைகள் தகர்க்கும்” என்னும் வாசகத்தை எழுதி கவரிட்டு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.


« PREV
NEXT »

No comments