Latest News

May 01, 2016

கிளிநொச்சி மாவட்ட கல்வி வளத் தேவைகள் குறித்த கலந்துரையாடல்.
by admin - 0

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விவளத்தேவைகள் குறித்த அதிபர்களுடனான  விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 27.04.2016   கிளிநொச்சி கல்வி வலயத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பாடசாலைகளுடைய பௌதீக தேவைகளை நிறைவுசெய்தல் இஆசிரிய ஆளணியை பகிர்வு செய்தல் இ  என்பவற்றுடன் தேர்ச்சி அடைவுமட்டத்தை விருத்திசெய்தல்  தொடர்பாக விசேடமாக ஆராய்ப்பட்டது.  யுத்த காலத்தில் சீரான முன்னேற்றத்தை அடைந்துவந்த கிளிநொச்சி மாவட்;டத்தின் கல்விநிலை போருக்கு பின்னரான மந்த நிலையில் காணப்படுகிறது இதனால் பெற்றோர்கள் மத்தியில் கவலைகள் அதிகரித்திருக்கின்றது கல்வி நிர்வாகம் மீதும் ஆசிரியர்கள் மீpதும் அரசியல் தலைவர்கள் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது தொடர்ச்சியாக அடைவுமட்டத்தில் கிளிநொச்சி கல்விவலயம் பின்னிலையில் இருப்பது குறித்து பல்வேறு தரப்பாலும் சுட்டிக்காட்ப்பட்டதை அடுத்து இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது  

 பாடசாலைகளில் ஆசிரிய ஆளணி போதுமான அளவு காணப்படுகின்றபோதும் கணிதஇ விஞ்ஞானம் ஆங்கிலம்இ தொழிநுட்பபாடங்களில் இருந்து வருகின்ற ஆசிரிய பற்றாக்குறை இஆசிரியர்கள் தங்கி இருந்து கல்வி கற்பிற்பதற்க்கான விடுதி வசதிகள்இ போக்குவரத்து சீரின்மை  பிள்ளைகள் மீதான பெற்றோரின் கவனக்குவிவில் ஏற்பட்டு இருக்கின்ற கலைவுத்தன்மை என்பவை குறித்து அதிபர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்  எல்லாவற்றிக்கும் மேலாக 2015ம்2016ம் 2017ம் ஆண்டுகளில்  க.பொ.த சா.த பரீட்சைக்கு தோற்றுகின்ற பிள்ளைகள் முன்பருவ  கல்வியை கற்றுக்கொண்டுஇருந்த காலங்களில் கொடுமையான யுத்தம் நிகழ்ந்தது விமான குண்டுவீச்சுக்களாலும் ஏறிகனை தாக்குதல்களாலும் குழந்தைகளுடைய மனங்கள் மிரண்டு போய்காணப்படுகிறது. அவர்கள் இன்னும் ஆற்றுப்படுத்த முடியாதவர்களாகவும் சிலர் நடத்தைசார் பிறழ்வு உடையவர்களாகவும் காணப்படுகின்றாகள் எண் எழுத்து  துறைகளில் அடிப்படை அறிவைக்கூட பெரிய வகுப்புகளில் வழங்க வேண்டி இருக்கின்றது இத்தகைய விடயங்களில் இருந்து எங்களுடைய பிள்ளைகளை மீட்டு எடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் கற்;க செய்வதற்க்கு புதிய விசேட செயற்த்திட்டங்கள் அவசியமாக உள்ளது. காண்பிய கற்றல் உத்திகளை கையாள்வதற்க்கும் அதிக நிதி வசதி தேவைப்படுகின்றது. எனவே இவை தொடர்பாக ஆராய்ந்து எல்லோரும் ஒன்றினைந்து இனிவரும் பரீட்சைகளில் அடைவுமட்டத்தை முன்னோக்கி உயர்த்துவதென முடிவெடுக்கப்பட்டது. 

இந்த கலந்துரையாடலில் பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் மாகாண சபை உறுப்பினர்களான அரியரத்தினம் மற்றும் பசுபதிப்பிள்ளை  மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி புவனராஜா கோட்;டக்கல்விப்பணிப்பாளர்ளான குகானந்தராஜாஇ அமிர்தலிங்கம்இ தர்மரட்னம் இஇராஜகுலசிங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சகல பாடசாலைகள் அதிபர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள் 
« PREV
NEXT »

No comments