ஆசிரிய உதவியாளர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக் கடந்த மாதம் மலையகத்தில் ஆசிரிய உதவியாளர்கள் மத்தியில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியிருந்தார். இதனை நம்பிய நாட்டிலுள்ள குறைந்த சம்பளம் பெறும் ஆசிரிய உதவியாளர்கள் தமக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக் கிடைக்கவுள்ளதாக எதிர்பார்த்திருந்தார்கள்.
10,000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆசிரிய உதவியாளர்களுக்கு இம்மாதச் சம்பளத்துடன் மேற்படி சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. இதனால் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆசிரிய உதவியாளர்கள் தாம் இம்முறையும் கல்வி அமைச்சரால் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றார்கள்.
மிகமிகக் குறைந்த சம்பளம் பெறும் ஆசிரிய உதவியாளர்கள் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறிப் பலராலும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். அந்தவகையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் 10,000 ரூபா ஆசிரிய உதவியாளர்களுக்குச் சம்பளய அதிகரிப்பு எனக்கூறி ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
மலையகத்தில் வெள்ளப்பாதிப்புக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு அரசாங்கம் அவர்களின் உழைப்பைச் சுரண்டி வெறும் 6000 (ஆறாயிரம்) ரூபா மட்டும் சம்பளமாக வழங்குவது மனிதாபிமானமற்ற செயலாக நோக்கப்படுகின்றது.
No comments
Post a Comment