Latest News

May 09, 2016

கிளிநொச்சி நகரின் திட்டமிட்ட உருவாக்கத்திற்கு மண்சார்ந்த புலமையாளர்களதும் கருத்தாளர்களினதும் ஆலோசனைகள் அவசியம்- சிறீதரன் எம்.பி
by admin - 0

கிளிநொச்சிநகரத்தை திட்டமிட்டவகையில் வடிவமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றுக் காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசசெயலகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரஅபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இங்கு கிளிநொச்சி நகரத்தைதிட்டமிட்ட வகையில் அபிவிருத்திசெய்வது தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. பரந்தன் உபநகரத்தை கைத்தொழில் மையநகரமாகவும் கரடிப்போக்குச் சந்தியை சேவைகளின் மையநகராகவும் கிளிநொச்சி நகரை கைத்தொழில் வணிக சேவைத் தொழிற்றுறை நகராகவும் இரணைமடுச் சந்தியை சுற்றுலா மற்றும் கல்வி அபிவிருத்தி நகராகவும் திருமுறிகண்டி பண்பாட்டு நகராகவும் உருவாக்குவதெனவும் இந்நகரங்களுக்கிடையே இணைப்புச்சலைகள் ஏ-9 வீதிக்குச் சமாந்தரமாக உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் எனவும் காண்பியத்துடன் விளக்கமளிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 'கிளிநொச்சி நகரத்தைத் திட்டமிட்டு அமைப்பதற்கான முன்வரைபு இங்கே முன்னளிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. இங்கு தரப்பட்டிருக்கின்ற நகராக்கல் திட்டம் தொர்பில் தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்கள், உட்சேர்கைகள,; நீக்கங்கள், அவசியமாகின்றன. கிளிநொச்சிக்கே உரிய தனித்துவத்தோடு விவசாய பண்பாட்டையும் உட்சேர்த்தவாறு நகராக்கம் அமையப்பெறவேண்டும். எமது மண்ணில் பிறந்து வளர்ந்து கல்வித்துறையில் மிளிர்கின்ற கல்வியலாளர்களிடமும் சமூகஅக்கறையோடு இயங்குகின்ற சமூக நேசிப்பாளர்களிடையேயும் புலம்பெயர்ந்து வாழுகின்ற இம்மண்ணைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இதற்காக மாவட்டமட்டத்தில் புத்திஜீவிகளை உள்ளடக்கிய முகாமைத்துவக் குழுவொன்றை உருவாக்கி நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து நகர அமுலாக்கல் திட்டமிட்ட வகையில் இடம்பெறவேண்டும்'என்றார்.


« PREV
NEXT »

No comments