பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறையில் ஈடுபட முயன்றவர்களை பொலிசார் கைது செய்தனர்.
பிரித்தானியாவுக்கு அதிகளவு வரும் அகதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது.
அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானியாவின் கெண்டில் அமைந்துள்ள கடற்கரை நகரமான டோவரில் அகதிகளுக்கு எதிராகவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் நியோ நாசிக் ஆதரவு வலதுசாரிகள் பேரணி மேற்கொண்டனர்.
அதேவேளையில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகதிகளுக்கு ஆதரவாகவும் கெண்ட் இனவெறி எதிர்ப்பு அமைப்பினர் பேரணி நடத்தினர்
இரு குழுக்களுமே ஒரே பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே 100க்கும் மேற்பட்ட பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொலிசாரின் தடுப்பை மீறி அகதிகளுக்கு ஆதரவாக போராடும் இடத்துக்கு செல்ல நியூ நாசிக் வலதுசாரிகள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டக்காரர்களில் 13 பேரை பொலிசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக டோவர் பகுதியின் எம்.பி. Charlie Elphicke கூறியதாவது, போராட்டக்காரர்களின் இந்த பேரணியால் டோவர் நகரே ஸ்தம்பித்தது.
இதனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி இந்நகரின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பொலிசார் தங்களின் கடமையை திறன்படவே செய்தனர் என்று கூறினார்.
இந்த பேரணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பேரணியின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடி எரிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

No comments
Post a Comment