தமிழக செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்ர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அதிமுக பிரமுகர் பைபாஸ் ராமசாமி என்பவர் குறித்து, அவருக்கு நெருக்கமான சிவகுமார் என்பவரிடம் போனில் பேசியுள்ளார்.
அதில், 'சிவா...இந்த பைபாஸ் ராமசாமிய கொஞ்சம் ஒழுங்கா இருக்க சொல்லுங்க. நடுரோட்டில வச்சு தலைய தனியா எடுத்துடுவேன். நான் சொன்னா வெட்டறதுக்கு என்கிட்ட நூறு பேரு இருக்கான். அந்த நாய் பயலுக்கு ஒரு பய கிடையாது. தெருவுல கிடக்கான். என்கிட்டே இருக்குற ஆளு பூரா உனக்கு தெரியும்.
இனிமேல் என்னை பத்தி பேசினான்னா வீட்டுக்குள்ள விட்டு வெட்ட விட்டுடுவேன். நான் சொன்னேன்னு சொல்லுங்க. அந்த **** பையனுக்கு போன் போட்டால் எடுக்க மாட்டேன்றான். அந்த ***** மகன் எனக்கு ஒண்ணும் வேலை செய்ய வேண்டாம். திமுகவுக்கே வேலை செய்யட்டும். இவன் வேலை செஞ்சு நான் ஒண்ணும் ஜெயிக்கல. இவன் என்ன ***** பையன் பண்ணிடுவான். இந்த ஜாதியைக் காட்டி மிரட்டுறது, ஆளைக் காட்டி மிரட்டுறது எல்லாம் என்கிட்டே காட்டக் கூடாது. பாலகிருஷ்ணன் கிட்ட வச்சுக்க சொல்லு. என்கிட்டே காட்டினான் என்றால் நடு ரோட்டுல நானே வெட்டிப்புடுவேன். என்ன விளையாடுறானா... எங்கியாவது பேசினான்னா அங்கு வந்து தலையை தூக்கிடுவேன். நாளைக்கே வெட்டி கொன்னுடுவேன் நானு. விளையாண்டு திறிரானா இவன். கமிஷனர் ஆபிஸ்ல போய் என்ன என்ன பேசியிருக்கான்... என்னை பேசியிருக்கான், எம்.பி.யை பேசியிருக்கான். இவன கூப்பிட்டேனா வேலை பாக்க.. கட்சியில கட்டம் கட்டிபுடுவேன். கட்சியை விமர்சனம் செய்யிறது. கூப்பிட்டு சொல்லுங்க சிவா.." என்று ராஜேந்திர பாலாஜி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருகிறோம் என்று அதிமுக பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக புகார் எழுந்துள்ள விவகாரத்தில், இந்த உரையாடலில் உள்ள சிவா என்பவர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. மேலும் அவர் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த ஆடியோ வெளியாகி உள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
No comments
Post a Comment