Latest News

April 19, 2016

சினிமா கிரிக்கெட் (துடுப்பாட்டம்) புறக்கணித்தனர் தமிழர்கள்-புதிய புரட்சியில் தமிழகம்
by admin - 0

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் குவியவில்லை என்பதால் நடிகர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். வீடுகளிலும் கூட மக்கள் இந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டவில்லை.

ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் இணைந்து நடைபெறும் கிரிக்கெட் போட்டியைத் துவங்கி வைத்தனர்.


ஒருசிலரைத் தவிர மொத்த கோலிவுட் நடிகர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர். எனினும் நடிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மைதானத்தில் கூட்டம் குவியவில்லை.

பல நாட்களாக விளம்பரம் செய்து, முன்னணி நடிகர்கள் ஒன்று திரண்டும் கூட இப்போட்டியைக் காண மக்கள் முன்வரவில்லை. இதற்குக் காரணம் இந்த கிரிக்கெட் போட்டியில் நடிகர் சங்கத்தின் சுயநலம் மட்டுமே அடங்கியுள்ளதாக பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி பேஸ்புக் உள்ளிட்டவற்றில் பிரசாரத்தில் குதித்ததே.

ஸ்டேடியத்தின் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காணப்பட்டன. வெயிலும் அதிகம் என்பதால் யாரும் இந்தப் போட்டி குறித்து ஆர்வம் காட்டவில்லை. இதனால் நடிகர் சங்கம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த கிரிக்கெட் போட்டி அவர்களுக்கு கைகொடுக்குமா? என்பது சந்தேகம்தான்.



« PREV
NEXT »

No comments