Latest News

April 29, 2016

கட்டமைப்பு ரீதியான தமிழின இனவழிப்பு ஆதாரம் இணைப்பு
by admin - 0

இலங்கையில் பௌத்த மதத்தை பரப்புவதில் அதிக செல்வாக்கு செலுத்தியவர்கள் தமிழர்கள் என்பது மறுக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது ஆனால் இன்று தமிழர்களை பிடித்து அவர்களை புத்தமதத்துக்கு மாற்றும் கட்டமைப்பு ரீதியான இனவழிப்பை மேற்கொள்கிறார்கள்

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர்.

கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள்.

துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி பெற்றுள்ள இந்தச் சிறார்களை, எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பௌத்த போதனைகளை வழங்குவதற்காக 
தயார்படுத்தவுள்ளதாக பெந்திவெவ தியசேன தேரர் அங்கு சென்ற பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளரிடம் கூறினார்.
« PREV
NEXT »

No comments