Latest News

April 20, 2016

போலி முகப்புத்தகப் பொய்ப்பரப்புரைகளால் சிறீதரனை எதுவும் செய்யமுடியாது
by admin - 0

பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கப்பால் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடுகள் நிறைந்த மனிதர் சிறீதரன் என்பதனால் தமது இலக்கை-அரசியல் ஆசையை குறுக்கு வழியில் அடையும் கனவுடன் சிவஞானம் சிறீதரன் மீது சில பொய்யர்கள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அநாகரிகமான வகையில் போலிப்பரப்புரை செய்வதுவருகின்றார்கள்.

"ஹ...ஹ...ஹ... சிறீதரன்தான் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமோ? சிறீதரனைவிட நான் எவளவோ கெட்டிக்காரன், ஆளுமைகொண்டவன், அரசியல் ஞானம் மிக்கவன், சிறீதரனைத்தான் மக்கள் தெரிவுசெய்ய வேண்டுமோ? என்னை இந்த மக்கள் தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்தால் என்ன? அரசியல் தெரியாத சிறீதரன் இப்போது அரசியல்வாதி, மக்களை ஏமாற்றத் தெரியாத சிறீதரனை என்னால் ஏமாற்ற முடியும், சிறீதரனை ஆதரித்துள்ள முட்டாள்கள் கூட்டமாகிய மக்களை நான் இப்போது காலில் விழுந்து சேர்ந்துள்ள எனது கும்பல் நன்றாக ஏமாற்றும்... இனி நானும் எம்.பி. தான்.'' என்ற கற்பனைக் கனவுலகில் மிதந்தவர்கள், மக்களால் விரும்பப்படும் மனிதராகிய சிறீதரனின் தனிமனித ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை மீது சேறு பூசும் சொப்பன அவத்தையில் தமக்கேயுரிய கெட்ட துர்வார்த்தைகளைப் பயன்படுத்தி போலி முகத்துடன் மிகவும் அநாகரிகமாக மனிதத்தன்மையற்ற முறையில் எழுதி புலம்புகிறார்கள்.

சிறீதரன் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் பொய்யான வகையில் போலி முகப்புத்தகங்களினூடாக புலம்பி வரும் அந்த மு.க. வுகள் பற்றி எவரும் அலட்டிக்கொள்வதாகவில்லை. சிறீதரனைப் பற்றி இப்படியாகப் புலம்புபவர் தன்னைத்தானே முட்டாள் என்று ஏற்றுக்கொள்ளும்போது இதனைவிட வேறு என்ன வேண்டும்.

ஊரே அறிந்த, உலகமே அறிந்த சிறீதரனின் வாழ்க்கை முறை, தனிமனித ஒழுக்கம் பற்றி மிகவும் கேவலமாக அநாகரிகமான முறையில் குறைகூறி போலி முகப்புத்தகத்தினூடாகப் புலம்புபவர் சிறீதரனிடம் வாங்கித் தின்று வயிறு வளர்த்து இப்போது கொளுத்துவிட்ட நிலையில் தின்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் நன்றிகெட்டவன் என அறிந்தவர்கள் ஆவேசப்படுகின்றார்கள். ஆனாலும் அந்த நல்ல மனிதன் சிறீதரன் அவனவன் செய்வது அவனவனுக்கேதான் இதை இறைவன் பார்த்துக்கொள்ளுவார் அமைதியாக இருங்கள் என்று நிதானமாகக் கூறிவருகிறார்.

ஒரு ஆசிரியராக, அதிபராக, சமூகத் தொண்டனாக எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல மனிதனாக தனது வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட சிறீதரனை மக்கள் அதிகப்படியாக விரும்பி தமது பிரதிநிதியாக தெரிவுசெய்து ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இப்படியான ஒருவரைப் பற்றி தனது முகத்தைக் காட்டவே துணிவில்லாமல் போலியான முகப்புத்தகங்களினூடாக மிகவும் வெறுக்கத்தக்க அநாகரிகமான முறையில் தமிழ் சமூகத்தையே சீரழிக்கும் வகையில் துர்வார்த்தைகளைப் பீற்றி வரும் பிறப்புக்களை மன்னிக்கவே முடியாது...
துரோகத்தை தூர விரட்டியடிப்போம் உண்மைக்காக உழைப்போம் 
-சி.சிவேந்திரன்.-
« PREV
NEXT »

No comments