கிளிநொச்சி எம்.பி சிறிதரனின் அலுவலகத்தில் சம்பளத்திற்காக வேலை செய்த பொன்.காந்தம் தான்தான் அந்த அலுவலகத்தைக் கட்டியாள்வதாக நினைத்து சிறிதரன் எம்.பியின் ஆதரவாளர்களை ஏசித் துரத்தி விரட்டியடித்து வந்தார். இவர் ஏன் எம்மை இப்படித் துரத்துகின்றார் என நினைத்தாலும் இவர் இப்படியான ஒரு திட்டத்தோடுதான் இருந்து செயற்பட்டுள்ளார் என்பது எமக்கு இப்போதுதான் தெரிகின்றது.
சிறிதரனோடு இருந்தே சிறிதரனை அழித்துவிட்டு தான் ஒரு எம்.பி ஆகவேண்டும் என்று கனவுகண்ட பொன்காந்தம் தனக்கே தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி தரவேண்டும் என்று சண்டைபிடித்து தன்னைத்தானே தமிழரசுக் கட்சியின் உபதலைவர் என்று கூறி தனக்குத்தானே புகழாரம் சூட்டி பெருமை பேசிக்கொண்டது.
தான் ஒரு தலைவராக வேண்டும் என்பதற்காக காலில் விழுந்து காலைவாரவும் தயங்கவில்லை. புளியம்பொக்கணையில் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் காலில் குப்புற விழுந்து ஐயா நீங்கள்தான் எல்லாம் என்று கூறியதைப் பார்த்த எமக்கு இப்படியும் ஒரு மனிதனா என்று வெட்கமாகவே இருந்தது. இப்படித்தான் மட்டக்களப்பில் வைத்து சம்பந்தரது காலிலும் விழுந்தார்.
இப்படியாகக் கூறிவந்த இந்தப் பொன்.காந்தம் சிறிதரன் எம்.பி வெளிநாட்டிற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நான் ஒரு எம்.பியாக வேண்டும் என்றால் முதலில் பிரதேசசபையின் தலைவராக வேண்டும் என்று கூறி தனக்கே கரைச்சிப் பிரதேச சபையின் தலைவர் பதவியைத் தரவேண்டும் என்று கூற, அதற்குக் கட்சியின் நிர்வாகத்தில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதற்கு நிர்வாகம் என்ன நிர்வாகம் நான்தான் கட்சியின் உபதலைவர் அதை நான் முடிவெடுத்தால் சரி அதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பொன்.காந்தம் கூறியதை கட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால், தான் கட்சியை விட்டுச் செல்வதாகக் கூறி வெளியே சென்று சிறிதரன் எம்.பிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்.இந்தப் பொன்.காந்தம் ஆனந்த சங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக் கூட்டணியை தனது தலைமையில் தருமாறு கோரி அவருடன் பேச்சு நடத்தியுள்ளார். அதற்கு ஐயா அவர்கள் சம்மதிக்கவில்லை. இப்போது டெலோ செல்வத்துடன் தலைவர் பதவி கேட்டுப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தப் பொன்.காந்தத்தைப் பற்றி இவரது வாழ்க்கை முறை பற்றி எல்லாருக்கும் நன்றாகவே தெரியும் அதனால் இவரைப்பற்றி இதில கூறத் தேவையில்லை. இருந்தாலும் தன்னைப் போலத்தான் மற்றவர்களும் என்று இவர் நினைத்துவிட்டார். நன்றி கெட்ட மனிதனான இந்தப் பொன்.காந்தம் தன்னை பெற்று வளர்த்தவளையும் தான் காதலித்துக் கலியாணம் செய்த மனைவி பிள்ளைகளையுமே நடுத்தெருவில் விட்டிட்டு எவ்வித கவலையுமின்றி வாழ்ந்தவர்தான் இவர்.
தனது சொந்த உறவுகளையே நடுத்தெருவில் விட்டிட்டுச் சென்ற இவர் தன்னை அரவணைத்து உதவிகள் செய்த சிறிதரனை சும்மாவா விடுவார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவி தமிழினி எழுதியதாகக் கூறி புலி எதிர்ப்பாளர் ஜெயக்குமாரனால் வெளியிடப்பட்ட ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலினை தனது அரசியல் புலம்பலுக்காகப் பயன்படுத்தி கிளிநொச்சியில் வெளியிட்ட பொன்.காந்தம் அந்த நூலில் புலிகள் பற்றிக் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என தான் எவ்விடத்திலும் உறுதிப்படுத்துவதாகக் கூறிவருகின்றார். இந்த நூலைப் பற்றி விமர்சிப்பவர்களை புலனாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்பினையுடைய ஜெயக்குமாரன் சும்மா விடமாட்டார் எனவும் கூறி வெருட்டி வருகின்றார்.
அருள், கிளிநொச்சி.
No comments
Post a Comment