இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பரிகாரநீதியே, ஈழத்தமிழர்களது அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக அமையும் எனும் நிலைப்பாட்டுக்கு அமைய ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை, டோட்முண்ட் நகரில் (Immermannstr 36,44147 Dortmund ) மதியம் 2:30 மணிக்கு இப்பொதுக்கூட்டம் இடம்பெறவிருக்கின்றது.
ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தினை அடிப்படையாக கொண்டு, இலங்கையின் நிலைப்பாட்டை கண்காணிக்கவென நியமிக்கபட்டுள்ள சர்வதேச நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு (*Sri Lanka Monitoring Accountability Panel (MAP) தொடர்பிலான செயற்பாடு.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நற்பதாவது ஆண்டில் அதன்அரசியற் பரிமாணம் குறித்தான செயலியக்கம் ஆகிய விடயங்கள் இப்பொதுக்கூட்டத்தில் பிரதானமான பேசப்படவிருக்கின்றன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இணையவழி காணொளி பரிவர்த்தனை வழியே பங்கெடுக்க இருக்கின்றார்.
அத்துடன், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் சுதன்ராஜ் அவர்களும் நேரடியாக பங்கெடுத்துக் கொள்ளவிருக்கின்றார்.
கருத்துரைகள், கேள்வி பதில், கருத்துப்பரிமாற்றமென பொதுமக்கள் அரங்காக இந்நிகழ்வு இடம்பெறவிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment