Latest News

April 28, 2016

நம்மவர் குறும்பட திறனாய்வு‬ (‪ ‎காதலின் நிறம்‬)
by admin - 0

நம்மவர் குறும்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக வேற்று இன மக்களின் கலாச்சார வாழ்க்கை முறைமையினையும் அவர்களின் மனவோட்டத்தின் படிநிலையையும் கண்முன்னே நிறுத்தி வெற்றி கொண்ட குறும்படம் காதலின் நிறம்

இன்றைய வெளிநாட்டு கலாச்சாரத்தையும் வெளிநாட்டவர்கள் கலாச்சரமின்றியவர்கள் என்று தென்னாட்டுத் தமிழ் சினிமாவும் சென்னைக் கலாச்சாரமும் எமக்கு கோடுகாட்டிய பொழுதுகளில் வெளிநாட்டவர்களிடையும் நிற கலாச்சார வெறி உண்டு என்பதனையும் அவர்களிடையேயும் பலவிதமான ஒழுக்க முறைமைகள் உண்டு என்பதனையும் நிலைநிறுத்தி ஒரு அந்நிய சூழலையும் அந்த மனிதர்களையும் உள்வாங்கிய இந்த குறும்படம் தான் சொல்ல வந்த விடயத்தை ஆழமாக எம் மனதில் விதைத்துச் சென்றது. 

வேற்று நாட்டவர்களுடன் நாம் இணைத்து பணியாற்றி எம் கலை கலாச்சார பாரம்பரிய முறைமைகளை அவர்களுக்கும் தெரியபடுத்துவதிலேயே எம் மொழிவளமும் எம் பாரம்பரிய வரலாறும் காக்கப்படும் என்பதில் நாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த வகையில் இந்த குறும்படமும் ஒரு ஈழத்துச் சினிமா வரலாற்றின் ஒரு திருப்புமுனையாகவே நாம் காண்கின்றோம். 
புலம்பெயர் தமிழ்ச்சூழல் எப்படியான ஒரு மன சிக்கலுக்குள் வாழ்கின்றது என்பதனையும் எம் இளைய சமுதாயம் எப்படி இன்னும் ஒரு சமுதாயத்துடன் கலக்க முனைகின்றது என்பதையும் வெளிநாட்டு தந்தைக்கு இருந்த கேள்வி இன்றைய தமிழ் பெற்றோரின் மனங்களில் உண்டு என்பதனையும் தொட்டுச் இந்த குறும்படம் தொட்டுச் சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். 

ஒரு காதல் நிறம் மதம் மொழி கலை கலாச்சாரம் பார்த்து வருவதில்லை எல்லோரினதும் இரத்த துணிக்கைகளும் ஒன்றே என்று கூற முற்பட்டாலும் காதலித்து மணந்து கொண்டவர்களின் எதிர்கால வாழ்க்கை பற்றிய அவர்களின் குழந்தைகளின் எதிகால மொழி கலை கலாச்சார பண்பு பற்றிய பயம் எம் மனதில் ஓடுவதையும் தடுக்க முடியவில்லை. 

இத்தாலிய நடிகர்களும் எம் கதாநாயகனும் மிகவும் அழகாக தனது நடிப்பினை உள்வாங்கி நடித்து இருந்தாலும் எம் மொழியில் ஒரு வார்த்தை கூற கூறாததும் எம் மொழிபற்றி படத்தின் இயக்குனர் தனது கதையமைப்பில் உள்வாங்காததும் இந்த குறும்படத்தின் இன்னுமொரு குறை என்றே கூற முடிகின்றது.

ஒரு சிறந்த மனநிலையான கதாநாயகன் கதாநாயகி தந்தை பற்றி கூறும்போது அவரை அணைத்துக்கொண்டு இருக்கும் காட்சியில் முக அசைவில் கூடிய கவனம் எடுத்திருக்க வேண்டும்.
மிகசிறந்த தரமான ஒளியமைப்பு ஒலியமைப்புடன் நேரிய காட்சிக்கோப்புடன் வெளிவந்த காதலின் நிறம் எம்மவர் குறும்பட வரலாற்றின் இன்னுமொரு சிறப்பான வரவு.


காதலை மட்டும் போற்றும் காதலர்களுக்கு இந்த காதலின் நிறம் சிறந்ததொரு சமர்ப்பணம் 
மொத்தத்தில் காதலின் நிறம் எம் இளைய‬ ‪#‎தலைமுறையின் முகங்களை துயிலுரிக்கும் உண்மை படைப்பு‬ 
‪ ‎ஈழத்து சினிமா சாதனையும் வேதனையும்‬" இது மாற்றத்துக்கான வழி 
என்றும் அன்புடன் 
காவியா 
« PREV
NEXT »

No comments