Latest News

April 15, 2016

யாழ்ப்பாண கல்வி சீரழிவது ஏன்? மாணவிகள் தியேட்டர் வாசலில்! இதோ புகைப்பட ஆதாரம்!!
by admin - 0

வடக்கு மாகாணத்தின் கல்வி சீரழிவு மற்றும் கலாச்சார சீரழிவு என்பது வேறு இனத்தவர்களால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்றது என பலரும் கூக்குரல் இடுகின்றர்கள். ஆனால் இங்கே பாருங்கள். வடக்கு மாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர் ஆனோல்ட் பாடசாலை சிறுமிகளை கூட்டி வந்து தியேட்டர் வாசலில் பரிசு கொடுக்கின்றார். விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் உலாவும் காவாலிகளுடன் சேர்ந்து நுாறு ரூபா பெறாத அன்பளிப்புப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி அற்பமான வேலைகள் செய்துள்ளார். 

இந்த மாணவிகளை சீருடையுடன் தியேட்டருக்கு கொண்டு வந்தது யார்? இதற்கு வடக்கு மாகாணசபை என்ன சொல்லப் போகின்றது? 

தனக்கு வழங்கப்படும் மாகாணசபை நிதிகளைக் கொண்டு மாணவர்களுக்கு உதவி செய்வதை விட்டு விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் உலாவும் காமுகர்கள், காவாலிகளின் பணத்தை ( எங்கு களவெடுத்தார்களோ தெரியாது) வைத்து ஆனோல்ட் இவ்வாறு செய்வது சரியானதா?


குறித்த விஜய் ரசிகர்களில் யாராவது படித்த பொறுப்பான வேலைகளில் இருக்கின்றார்களா? அவர்களின் பின்னனி என்ன என்பதை ஆனோல் அறிவாரா? அல்லது அவ்வாறான பின்னனி உள்ளவர்களுடன்தான் ஆனோல் தொடர்பாக இருக்கின்றாரா?

பதின்ம வயது மாணவிகளை தியேட்டர் வாசலுக்கு கொண்டு வந்து படம் காட்டி முடித்திருக்கும் ஆனால்ட் போன்றவர்கள் இருக்கும் மட்டும் வடக்கு மாகாணக் கல்வித் துறை கொடி கட்டிப் பறக்கும் என யாரும் எதிர்பார்க்க முடியாது? 

« PREV
NEXT »

No comments