முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து சென்ற இனந்தெரியாத நபர்,வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தாயை மோசமாகத் தாக்கியுள்ளார்.
இதனால்படுகாயமடைந்த அந்தத் தாயார் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்தச்சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டில் துப்பரவுப்பணியை மேற்கொண்டிருந்த முன்னாள் போராளியான அந்தத்தாயிடம் சென்ற இனந்தெரியாத நபர் அவருடைய கணவரான முன்னாள் போராளி எங்கே எனவிசாரித்துப் பின்னர் தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்கப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் வசித்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
கணவனை விசாரித்துக் கொண்டு வீட்டின் உள்ளே வந்த இனந்தெரியாத நபரால் முகத்தில்தாக்கப்பட்டதை அடுத்து நிலைதடுமாறி மயக்கமுற்ற பெண்ணை அயலவர்கள் முல்லைத்தீவுமாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments
Post a Comment