Latest News

April 22, 2016

தரும்புரத்தில் ஓர் இந்திரன் அவன் தான் எங்கள் இளவாணன் அண்ணா !-7ஆம் ஆண்டு நினைவு நாள்
by admin - 0

தரும்புரத்தில் ஓர் இந்திரன்
அவன் தான் எங்கள் இளவாணன்
அண்ணா !

சோழன் வாணிபத்தில் வலம் வந்து மருதம் வாணிபத்தை ஆண்ட இளவரசனும் இவனே.mதான் ஒரு பணிப்பாளர் என்ற அந்தஷ்த்தை 
கொஞ்சமும் காட்டி கொடுக்காமல் ஒரு சாதாரண பணியாளன் போல் எம்மை அன்பாக ஆளுமையாக வழிநடத்தும் பாங்கு மிகப்பெரும் சாதனையாக 
இருந்தது இந்த வீரனிடம்.

மல்லாவியில் இருந்து பணி நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு போய் விட்டால் உடனும் என்னை தனது அலுவலகத்திற்கு வரும் படி அழைத்து வீட்டில் உள்ள ஆக்கள் தொடக்கம் ஒவ்வொருவரும் எப்படி உள்ளனர் என விசாரித்து சாப்பாட்டுக்கான ஒழுங்குகள் எல்லாம் செய்து தந்து அக்கறையுடன் செயல்படும் எங்கள் வீட்டு உடன் பிறவா சகோதரனும் இவனே..

சில காலங்கள் என்னை (வோக்கி) இயக்கும் பணியும் அத்தோடு உள்ளக்கணக்காய்வு பணிக்கும் நியமித்தது இருந்தார். அனைத்து போராளிகளுக்குமான வழங்கல் எமது மருதம் வாணிபத்தினால் எல்லா இடங்களிலும் வழங்கப்பட்டது இதன் போது படிவங்களுக்கு கூடி குறைத்து மரக்கறிகள்,புலால் எமது பணியாளர்கள் வழங்கினால் உடனும் போராளிகள் இளவாணன் அண்ணாவை தொடர்பு கொண்டு முறையிட என் அலை வரிசை கதறும்(சாளி வன்/மருதம்)என்று அவருடைய கண்டிப்பு நிறைந்த குரலில் ஆனால் நிதானமாக சொல்லுவார் என்ன பிரச்சனை எண்டாலும் பார்த்து நிவர்த்தி செய்யுங்கள் என்று..

என் உயிரை காப்பாற்றிய உத்தமனும் இவரே 2003ஆம் ஆண்டு கிளிநொச்சி பணிமனைக்கு உள்ளக கணக்காய்வு ஒன்றுகூடலுக்கு சென்றிருந்தபோது சக தோழிகளுடன் தூங்கி கொண்டிருந்தேன்(இரத்தப்புடையன்) பாம்பு என்னை பதம் பார்த்தது உடனும் பொன்னம்பலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்ட போதும் நான் தப்புவது கடினம் என வைத்தியர்கள் கூறினார்கள்.காலையில் இதை அறிந்து கொண்ட இளவாணன் அண்ணா உடனும் வந்து எங்கிருந்தாவது எவ்வளவு செலவானாலும் மருந்து எடுத்து பிள்ளையை காப்பாற்றுங்கள் தான் வீட்டுக்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று திடமாக கூறி ஏனைய மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து என்னை காப்பாற்றினார்.அந்த காலப்பகுதியில் நிறைய பணம் செலவாகி இருந்தது மருத்துவ சிகிச்சைக்காக.
தெரியாத அறியாத எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர்களுடைய தேவைகளை கேட்டு அறிந்து பூர்த்தி செய்து வைப்பதில் இளவாணன் அண்ணாவை போல் வேறு யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

மருதம் வாணிபம் எங்கள் வீடு ஒவ்வொரு போராளிகளின் தேவைக்கேற்ப இறைச்சிக்காக கால்நடைகள் வளர்க்கப்பட்டன அதில் இருந்து பால் வினியோகமும் போராளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்து பெற்ற தாய் போல் ஒவ்வொரு போராளிகளின் உணவு விடயத்திலும் அக்கறை காட்டிய உத்தமன்.

வேறு ஒரு பணிப்பாளருக்கு கீழ் பணியாற்றுவது என்றால் பல தரப்பட்ட கட்டுப்பாடுகளும் விதி முறைகளும் இருக்கும் ஆனால் இளவாணன் அண்ணா அப்படி அல்ல நாம் ஏதும் தவறு செய்து விட்டால் அறிக்கை எழுதி தாங்கோ என கேக்க மாட்டார் நேர கூப்பிட்டு காரணத்தை தெரிந்து கொண்டு அறிவுரை கூறி அனுப்புவார்.இன்னாளில் எங்கள் (வாகைசூடி) அண்ணாவை மறந்திட முடியாது மருதம் வாணிபத்தின் வலக்கை.இவனை பொறுப்பாளர் என்று ஒரு நாள் கூட நான் அழைத்ததோ அந்த ஸ்தானத்தில் பார்த்ததோ இல்லை ஏனெனில் அடிபட்டு ஒரு கோப்பையில் சாப்பிட்ட எங்கள் வீட்டு பிள்ளை.நான் பிழை செய்தால் சக நண்பர்கள் மத்தியில் வைத்து பேச மாட்டார் தனது அலுவலகத்துக்கு வா என கூப்பிட்டு தான் இது பிழை அது பிழை என கூறுவதோடு வாயாடி என்ற பெயரையும் எனக்கு சூட்டிய வாகைசூடி அண்ணாவே இவன் தான்.இன்று விண்ணிலா? மண்ணிலா? நான் அறியேன் எங்கிருந்தாலும் நீ உயிரோடு வருவாய் என்ற நம்பிக்கையோடு காத்து கிடக்கிறோம் அண்ணா.

ஒவ்வொரு போராளிகளின் ரத்தத்திலும் இளவாணன் அண்ணாவின் பெயர் பதிந்து இருக்கும்.இயற்கை விரும்பி ஆடம்பரம் இல்லாத எழில் நிறைந்த ஒரு அண்ணன்.கறுப்பு மோட்டசைக்கிலும் ஒரு வோக்கியும் எப்போதுமே அவரோடு இருக்கும்.வீதிகளில் தெரிந்தவர்களை கண்டால் புன்னகை நிறைந்த ஒரு தலை ஆட்டலோடு விலகி செல்லுவான்.இறுதி யுத்தத்தின் போதும் கூட மக்களுக்கும் போராளி குடும்பங்கள்,மாவீரர்குடும்பங்களுக்கும் பால் மா தொடக்கம் பல்பொருட்கள் வழங்கிய ஒரு தூய உள்ளம் படைத்த எங்கள் இளவாணன் அண்ணாவை இழந்து நிக்கின்றோம்.அன்பான மனைவி,இரு குழந்தைகளென இல்லறம் கண்டவனை இயமன் இழுத்து சென்று விட்டான்.

இன்னாளில்(அண்ணிக்கும்,பிள்ளைச்செல்வங்களுக்கும்)ஆறுதலை மன உறுதியை தெரிவித்து கொள்கிறேன்.

தருமபுரத்தில் பிறந்ததலோ என்னவோ ஏழை மக்களின் துயரம் போக்கிய ஈழத்து மைந்தனுக்கு ஒரு கணம் என் நினைவுகளை ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து மருதம் வாணிபம் சார்பாக  கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகின்றேன்


மார்ஷல் வன்னி
« PREV
NEXT »

No comments