Latest News

April 14, 2016

கத்திமுனையில் துணிகரக் கொள்ளை: முல்லைத்தீவில் சம்பவம்
by admin - 0

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குடப்பட்ட தேவிபுரம் 'அ' பகுதி விக்கி குடியிருப்பில் நான்கு பேர் கொண்ட ழுவினர், இன்று வியாழக்கிழமை (14) அதிகாலை கத்திமுனையில் வீடொன்றைக் கொள்ளையிட்டுள்ளனர். வீட்டின் மின்னிணைப்பை துண்டித்துவிட்டு வீட்டிலிருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்திய  அந்தக்குழு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. சுமார் 15 பவுண் நகைகளையும் 65,000 ரூபாய் பணத்தினையும் இவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வீட்டில் நுழைந்த அந்தக்குழுவினர், அவ் வீட்டில் எதுவுமே கிடைக்காத நிலையில் அவர்களிடமிருந்த அலைபேசியைப் பறித்துச்சென்றுள்ளனர்.  இந்தச் சம்பவத்தை அறிந்து அப்பகுதிக்கு வந்த புதுக்குடியிருப்புப் பொலிஸார், கொள்ளையிட்ட குழுவினரது உடையையும் அங்கு சிதறிக்கிடந்த சிறிய தொகைப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்திவரும் புதுக்குடியிருப்புப் பொலிஸார், மேலதிக விசாரணையில் மோப்ப நாய்களையும் ஈடுபடுத்தி வருகின்றனர். 
« PREV
NEXT »

No comments