தமது உறுப்பினர் ஒருவர் இலங்கையில் பணியாற்றிய வேளையில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் உதவிப்பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை தெரிவித்துள்ளார்.
தமது பணியாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த விடயத்தை பார்ப்பதாக பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பணியாளர் தற்போது சென்னையில் நாடு கடந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments
Post a Comment