தெஹிவளை – கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிரபல வர்த்தகர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட நான்கு பேர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று காலை 10 மணிக்கு தெஹிவளை பொலிஸாருக்குச் செய்யப்பட்ட முறைப்பாடொன்றை அடுத்தே குறித்த வர்த்தகர், அவரது மனைவி, அவர்களது மகள் மற்றும் அவர்களின் உறவுக்காரர் ஒருவரின் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கேஷர் வீதியில் பிரபல இலத்திரனியல் வர்த்தகரான ஹுசைன் மெளலானா (வயது 65), முன்ஸிரா மெளலானா வயது (58), ஹுஸ்னா மெளலானா (வயது 13) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோரும் அவர்களுடன் நேற்று முன் தினம் இரவு குறித்த வீட்டில் தங்கியிருந்த அவர்களது உறவுக்கார சிறுமியான நிஸ்னா மெளலானா (வயது 13) என்ற சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை 10. 00 மணிக்கு தெஹிவளை பொலிஸ் நிலையம் சென்றுள்ள, உயிரிழந்த வர்த்தகரின் முன் வீட்டில் வசிக்கும் உறவுக்காரர், தனது முன் வீட்டில் உள்ள உறவினருக்கு ஏதோ இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்தாவின் கீழான பொலிஸ் குழு உடன் ஸ்தலத்துக்கு சென்றுள்ளது.
பொலிஸார் அங்கு செல்லும் போதும் இலக்கம் 40 பீ, கவுடான, தெஹிவளை எனும் முகவரியில் உள்ள குறித்த மூன்று மாடி வீட்டின் கீழ் மாடியின் கதவுகளை உறவினர்கள் உடைக்க முயற்சி செய்துகொண்டிருந்துள்ளனர். முழுமையாக அடைக்கப்பட்டு குளிரூட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் பிரதான கதவை பொலிஸாரின் உதவியுடன் உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போதே நால்வரும் சடலமாக இருந்தமை உறுதியானது.
பொலிஸார் உள்ளே சென்று பார்த்த வேளையில் வர்த்தகரான ஹுஸைன் மெளலானா பிரதான கதவருகே உள்ள கதிரையொன்றிலும், அவரது மனைவியான முன்ஸிரா மெளலானா வீட்டின் அறையொன்றிலும் 13 வயதுகளை உடைய இரு சிறுமிகளும் வீட்டின் பிரதான அறையின் நிலத்திலும் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.
வீட்டில் இருந்த பெண்ட்ரி கபட் ஒன்று தீயினால் சேதமடைந்திருந்ததை அவதானித்த பொலிஸார் அதன் அருகே இருந்த இலத்திரனியல் அவன், பிளெக் டொப் ஆகினவும் தீயினால் கருகியிருந்ததை அவதானித்தனர்.
அத்துடன் வீட்டின் சுவர், நிலத்தில் கறுப்பு நிர துகல்கள் ஒட்டியிருந்த நிலையில் ஆங்காங்கே அதில் கை அச்சுக்கள் பதிவாகியிருந்தன. அத்துடன் எரிந்திருந்த பிளக் டொப் வீசுண்டிருந்ததுடன் வீட்டின் மின் கட்டமைப்பில் இருந்த ரிப் ஆளிகளில் இரண்டு கீழ் நோக்கி வீழ்ந்திருந்தன. இதன் ஊடாக ஏதோ ஒரு காரணத்தால் மின் தடைப் பட்டுள்ளமை பொலிஸாரினால் ஊகிக்கப்பட்டது.
ஸ்தலத்துக்கு விரைந்த தெஹிவளை பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கொட்டச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்தவின் தலைமையில் குற்றவியல் பிரிவின் அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொலிஸ் தடயவியல் பிரிவினர் ஸ்தலத்துக்கு வருகை தந்ததுடன் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள், மின்னியல் பொறியியலாளர்களும் ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன் போது நேற்று முன் தினம் இரவு 9.00 மணியளவில் குறித்த வீட்டின் முன் வீட்டில் வசிக்கும் உயிரிழந்த வர்த்தகரின் உறவினர்களுடன் இந்த குடும்பத்தார் உரையாடியுள்ளனர். அதன் பின்னர் இரு குடும்பத்தாரும் நித்திரைக்கு சென்றுள்ளனர்.
உயிரிழந்த வர்த்தகரின் மகளும் அங்கு தங்கியிருந்த உறவுக்கார சிறுமியும் நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலையில் கல்விகற்று வருகின்றனர். இந் நிலையில் நேற்று காலை அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் வண்டி வீட்டின் அருகே வந்துள்ளது. வண்டி ஒலி எழுப்பியும் வீட்டில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் முன் வீட்டில் வசிக்கும் உறவுக்காரர்கள் குறித்த வர்த்தகருக்கு தொலைபேசி அழைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். எனினும் அதற்கும் பதிலளிக்கப்படவில்லை. இதனையடுத்து அவ்வீட்டார் முன் வீட்டை நோக்கி சென்ற போது அங்கு கறுப்பு நிற துகல்கள் உள்ளிருந்து கதவின் கீழால் உள்ள சிறிய இடைவெளியூடாக கசிவதை அவதானித்துள்ளனர்.
இந் நிலையிலேயே அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதுடன் கதவை உடைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்விடயம் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குளிரூட்டப்பட்ட அந்த வீடானது முழுமையாக சீல் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென எற்பட்ட மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட புகையுடன் கூடிய விஷ வாயுவை அவர்கள் சுவாசித்திருக்கலாம் எனவும் அதன் காரணமாக மூச்சுத் திணறி அவர்கள் உயிரிழந்திருக்க வேண்டும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வர்த்தகரின் மனைவி முன்ஸிரா மெளலானா அறையில் மரணமடைந்திருந்த விதம், இரு சிறுமியரும் வீட்டின் பிரதான அறையில் அருகருகே முகங்குப்பற விழுந்திருந்த நிலைமை, வர்த்தகரான ஹுசைன் மெளலானா கதிரையிலேயே உயிரிழந்திருந்தமை ஆகியவறறை வைத்தே பொலிஸார் இவ்வாறு சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
வீட்டின் சுவர்களில் படிந்திருக்கும் கறுப்பு நிற துகல்கள் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட தீயினால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார், தீ பரவ ஆரம்பித்த போது முழு வீட்டையும் புகை சூழந்துகொன்டிருக்க வேண்டும் எனவும், வீடு முழுமையாக குளிரூட்டப்பட்டிருந்ததாலும் அப்புகை வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே சுற்ற அது விஷமாக மாறியிருக்கும் எனவும் சந்தேகிக்கின்றனர்.
அதனை வீட்டில் இருந்த இந் நால்வரும் சுவாசித்திருப்பதாக நம்பும் பொலிஸார் அங்கிருந்து தப்ப அவர்கள் முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும் வீட்டை முழுமையாக சூழந்திருந்த புகையால் அவர்களுக்கு கதவினை நோக்கி செல்வது சிரமமாக இருந்திருக்க வேண்டும் எனவும் சிறுமிகள் இருவரும் முகங்குப்பற வீழ்ந்திருந்தமையானது அவர்கள் தப்பிக்க ஓடியுள்ளதை காட்டுவதாகவும், வர்த்தகரும் கதவை திறக்க முயன்றுள்ள நிலையிலேயெ அதன் அருகே இருந்த கதிரையிலேயே உயிரை விட்டுள்ளதாகவும் சந்தேகிப்பதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வறாயினும் குறித்த நால்வரும் எதனால் உயிரிழந்தார்கள் என்ற உறுதியான காரணம் நேற்று மாலை வரை தெரியவரவில்லை.
நேற்று பிற்பகல் ஸ்தலத்துக்கு கல்கிஸை மேலதிக நீதிவான் ஜி.ஜி.எஸ். ரணசிங்க வருகை தந்து சடலங்களை பார்வையிட்டார். இதன் போது சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார். இந் நிலையில் நேற்று மாலை களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் ஸ்தலத்திற்கு விரைந்து பார்வையிட்டதுடன் சடலங்களையும் பொறுப்பேற்று பிரேத பரிசோதனைகளுக்கக கலுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்.
எவ்வாறாயினும் இந்த நான்கு மரணங்களும் வெளியில் இருந்து வந்த ஒருவரால் ஏற்படுத்தப்பட்டது என்பதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை என தெரிவிக்கும் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோத்கர் பிரதீப் நிஸாந்த, திடீரென ஏற்பட்ட மின்னொழுக்கினால் உருவான விஷ வாயுவை இவர்கள் சுவாசித்திருக்கலம் எனவும் அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மரணம் சம்பவித்திருக்கலாம் எனவும் நம்புவதாக குறிப்பிட்டார்.
எனினும் பிரேத பரிசோதனையின் பின்னரேயே உறுதியான உண்மைக் காரணியை கண்டறிய முடியும் என சுட்டிக்காட்டிய அவர் சதி முயற்சி ஒன்றுடாக இம்மரணங்கள் நிகழ்ந்துள்ளமைக்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவானது என சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட ஆகியோரின் மேற்பார்வையில் கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கொட்டச்சியின் ஆலோசனையில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்த தலமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கௌடான வீதியில் நேற்று இச்சம்பவத்தையு அடுத்து நூற்றுக்கனக்கான பொது மக்கள் கூடினர். அப்பிரதேசத்தில் பாரிய போக்கு வரத்து நெரிசலும் காணப்பட்டது.

No comments
Post a Comment