Latest News

March 07, 2016

வித்தியாவுக்கு உதவ திரண்ட ஈழத் தமிழர்கள்.
by admin - 0

கிழக்கு லண்டன், வோல்தம்ஸ்ரோ (Walthamstow) பகுதியைச் சேர்ந்த 24 வயதான வித்யா அல்போன்ஸ், லூக்கேமியா என்னும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.
லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்தியாவுக்கு உடனடியாக ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்யவேண்டும்.

இதுவரை பரீட்சிக்கப்பட்ட வழங்குனர்களின் ஸ்டெம் செல்கள் பொருந்தாத நிலையில் அவரால் அடுத்த இரண்டு மாதங்களே உயிர் வாழ முடியும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வித்தியாவின் இரத்தமாதிரிக்கு பொருந்தக்கூடிய ஸ்டெம் செல்லைத் தானம் கொடுக்கக்கூடியவர்கள் இங்கிலாந்தில் இருந்து 0303 303 0303 என்ற இலக்கத்திற்கும் வெளி நாட்டவர்கள் 0044 303 303 0303 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்

நல்ல மனமுள்ளோர் தமது ஸ்ரெம் செல்களை வழங்குவதன் மூலம் இவரின் உயிரைக் காக்க முடியும்.

இதனை வழங்குபவர் எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்.

அது குறித்து சரிவர அறியவும் வித்தியாவிற்கு உதவ உங்களைப் பதிவு செய்யவும்

https://www.anthonynolan.org/8-ways-you-could-save-life/donate-your-stem-cells
« PREV
NEXT »

No comments