கிளிநொச்சி வலய மட்ட சதுரங்கப் போட்டி முடிவுகள்.
கிளிநொச்சி கல்வி வலய பாடசாலை அணிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகள் நேற்று 5ம் திகதி மு.ப 8.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
15 வயதின் கீழ் ஆண், 15 வயதின் கீழ் பெண், 19 வயதின் கீழ் ஆண், 19 வயதின் கீழ் பெண் என நான்கு அணிகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை ஆகிய நான்கு கோட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிகள் பங்குபற்றின.
இப்போட்டிகள் யாவும் கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத்தின் நடுவர் குழுவினரால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளின் முடிவுகள் வருமாறு.
15 வயது ஆண்கள்.
1 ம் இடம்- கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
2 ம் இடம்- பளை மத்திய கல்லூரி.
3 ம் இடம்-இராமநாதபுரம் மகாவித்தியாலயம்
15 வயது பெண்கள்.
1 ம் இடம்- பளை மத்திய கல்லூரி.
2 ம் இடம்- கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
3 ம் இடம் - தரும்புரம் மத்திய கல்லூரி
19 வயது ஆண்கள்.
1 ம் இடம்- கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்.
2 ம் இடம்- கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
3 ம் இடம்- வட்டக்கச்சி மத்திய கல்லூரி.
19 வயது பெண்கள்.
1 ம் இடம்- உருத்திரபுரம் மகா வித்தியாலயம்.
2 ம் இடம்- தரும்புரம் மத்திய கல்லூரி
3 ம் இடம்- வட்டக்கச்சி மத்திய கல்லூரி.
இப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களையும் பெற்ற அணிகள் வடக்கு மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
No comments
Post a Comment