6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.
முதல் சுற்றுப் போட்டிகள்:-
முதல் சுற்றுப் போட்டிகளில் 8 அணிகள் இடம்பெறுகின்றன. இவை ’ஏ‘, ’பி’ பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.
‘ஏ’ பிரிவு:
1) வங்கதேசம்
2) நெதர்லாந்து
3) அயர்லாந்து
4) ஓமன்
‘பி’ பிரிவு:
1) ஸ்காட்லாந்து
2) ஜிம்பாப்வே
3) ஆப்கானிஸ்தான்
4) ஹாங்காங்
சூப்பர்- 10 சுற்றுப் போட்டிகள்:-
இந்தப் போட்டிகள் 15ம் திகதி முதல் நடக்கிறது. சூப்பர்-10 சுற்றில் தான் பிரதான அணிகள் அடியெடுத்து வைக்கின்றன.
இதில் இடம்பெறும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத இருக்கின்றன. இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில் இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும்.
அதேபோல் மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.
இதன் படி இன்று நடக்கும் முதல் சுற்றுப் போட்டிகளில் ஹாங்காங்- ஜிம்பாப்வே அணிகள் (பிற்பகல் 3 மணி), ஆப்கானிஸ்தான்- ஸ்காட்லாந்து (இரவு 7.30 மணி) அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.
No comments
Post a Comment