Latest News

March 11, 2016

பொன்னாலை மேற்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தியாக்கப்படவில்லை கிராம அலுவலர் தீசன் தெரிவிப்பு
by admin - 0

பொன்­னாலை மேற்கில் முதற்­கட்­ட­மாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி 127 குடும்­பங்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்ட போதும் அப்­பி­ர­தேச மக்­களின் அடிப்­படைத் தேவைகள் முழு­மை­யாகப் பூர்த்திசெய்­யப்­ப­ட­வில்­லை­யென பொன்­னாலை மேற்கு ஜே/170 கிராம அலு­வலர் ப.தீசன் தெரி­வித்தார்.

பொன்­னாலை, காட்­டுப்­புலம், பாண்­ட­வெட்டை ஆகிய மீள்­கு­டி­யேற்றப் பிர­தேச மக்­க­ளுக்குத் தேவை­யான அபி­விருத்­தி­களை முன்­னெ­டுப்­பது தொடர்­பான ஆரம்பக்கட்ட பொது அமைப்பு பிர­தி­நிதிகள் தொடர்­பான சந்­திப்பு வலி.மேற்குப் பிர­தேச சபையில் சபைச் செய­லாளர் திரு­மதி குண­வதி சண்­மு­க­லிங்கம் தலை­மையில் அண்­மையில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்ட கிராம அலு­வலர் மேலும் தெரி­விக்­கையில்,

387 நிரந்­தர குடும்­பங்­களைக் கொண்ட எமது பிர­தே­சத்தில் 127 குடும்­பங்கள் மீள்குடி­ய­மர்ந்­துள்­ளன. இம்­மக்­க­ளுக்கு முதற்­கட்­ட­மாக நிரந்­தர வீடுகள், மல­ச­ல­கூ­டங்கள், மின்­சார இணைப்பு வச­திகள், குழாய் மூல­மான குடி­தண்ணீர் வச­திகள் என்­பன மிக அத்­தி­யா­வ­சி­ய­மான தேவைகள் ஆகும்.
இத­னை­விட பாது­காப்­பான போக்­கு­வரத்­திற்கு பிர­தேச சபை வீதிகள், வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபைக்­கான மற்றும் வீதி அபி­வி­ருத்தித் திணைக்­க­ளத்­திற்­கான வீதிகள் என்­ப­ன­வும்­ மு­ழு­மை­யாக மீள்­புனர­மைப்புச் செய்­யப்­ப­ட­வேண்டும்.
மேலும் மீன­வர்­க­ளுக்கு இளைப்­பாறு மண்­டபம், இறங்­கு­துறை என்­ப­னவும் புதி­தாக நவீன வச­தி­க­ளுடன் அமைத்துத் தர­வேண்டும். ஆரம்ப சுகா­தார நிலையம், மயா­னத்­திற்­கான எரி­கொட்­டகை, மயான மண்­டபம் என்­பன இல்­லா­ம­லேயே காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றாக பொன்­னாலை மேற்கு மட்­டு­மன்றி அயற்பிர­தே­ச­மான காட்­டுப்­புலம், பாண்­ட­வெட்டை உள்­ள­டங்­கிய ஜே/174, ஜே/172 ஆகிய கிராம அலு­வலர் பிரிவுகளில் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்ட மக்­க­ளுக்கும் புதிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உத­விகள் கிடைத்­திட வலி. மேற்கு பிர­தேச சபை திட்­டங்­களைத் தயா­ரித்து இணைத்­த­லை­மைகள் ஊடாக மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் கவ­னத்­திற்குக் கொண்டுவர­வேண்­டு­மெனக் கேட்டுக் கொண்டார்.

இதே­வேளை குறித்த சந்­திப்பில் கலந்து கொண்ட ஜே/174 பிரிவின் கிராம அலு­வலர் சீ.ஜீவ­ராஜா பேசு­கையில்,
காட்­டுப்­பு­லத்தில் வாழும் 19 குடும்­பங்­க­ளுக்கும் பாண்­ட­வெட்­டையில் வாழும் 95 குடும்பங்களுக்கும் முதற்கட்டமாக வீடும் மலசல கூடமும் தேவையாகவுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களின் கல்வித்தேவைக்கு துவிச்சக்கர வண்டிகள், பாடசாலை உபகரணங்கள் என்பனவும் அத்தியாவசியமாக உள்ளன எனத் தெரி-வித்தார்.கல்வி ஒரு சக்திவாய்ந்த ஆயுதம்
« PREV
NEXT »

No comments