Latest News

March 21, 2016

ரணில் பிரதமர் பதவி பறிபோகும் நிலை -அதிருப்தியில் மைத்திரி
by admin - 0

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­பா­டு­க­ளினால் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் கடும் அதி­ருப்­தி­யுடன் உள்­ளனர். இந்த நிலைமை நீடித்தால் நாங்கள் கடு­மை­யான தீர்­மானம் ஒன்றை எடுக்­க­வேண்­டி­யேற்­படும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

எங்­க­ளுக்கு தெரி­யா­ம­லேயே சில விட­யங்­களை பிர­தமர் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றார். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறு­மை­யுடன் இருக்­கின்றார். ஆனால் நாங்கள் எவ்­வ­ளவு காலத்­துக்கு பொறு­மை­யாக இருப்போம் என்று கூற முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.
தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­வேண்டும் என்ற உய­ரிய நோக்­கத்­துக்­கா­கவே நாங்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் அர­சாங்­கத்தில் நீடிக்­கின்றோம். ஆனால் சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவை பெறு­ம­தி­யற்­ற­தாக பிர­தமர் கரு­தக்­கூ­டாது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள் மற்றும் தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­பா­டு­க­ளினால் சுதந்­திரக் கட்சி அதி­ருப்­தி­யு­ட­னேயே இருக்­கின்­றது. நாங்கள் இந்த அர­சாங்­கத்தில் மகிழ்ச்­சி­யாக இல்லை என்­பதை மட்டும் மிகவும் திட்­ட­வட்­ட­மாக கூற முடியும். குறிப்­பாக இந்த அர­சாங்­கத்­திற்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் வழங்கும் ஆத­ரவை பெறு­மதி அற்­ற­தாக கருதி செயற்­ப­டு­கின்­றனர்.
இது தொடர்பில் பால்­வேறு உதா­ர­ணங்­க­ளையும் சம்­ப­வங்­க­ளையும் நாங்கள் கூற முடியும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் எங்­க­ளுக்கு அர­சியல் ரீதியல் பல முரண்­பா­டுகள் இருந்­தாலும் நாங்கள் அவரின் பாரா­ளு­மன்ற ஜன­நா­யகப் பண்பை மதிக்­கின்றோம் . ஆனால் அவர் தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் பிர­யோ­கிக்கும் வார்த்­தைகள் எமக்கு கவ­லை­ய­ளிப்­ப­தாக அமைந்­துள்­ளன என்­ப­த­னையும் கூற­வேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் எம்.பி.க்கள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் இடம்­பெ­று­கின்­றனர். ஆனால் அவ்­வாறு சுதந்­திரக் கட்­சி­யினர் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதை மறந்­து­விட்டே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.
குறிப்­பாக வரவு செலவுத் திட்­டத்தில் திருத்­தங்­களை எமக்கு தெரி­யாமல் கொண்டு வரு­கின்­றனர். அது எமக்கு தெரி­யாது. அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தை பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்றும் பிரே­ர­ணையை கொண்டு வரும் போதும் எம்­முடன் பேச்சு நடத்­தப்­ப­ட­வில்லை. பின்னர் நாங்கள் முன்­வைத்த திருத்­தங்­களை ஏற்றுக் கொண்­டனர். நாங்கள் 9 திருத்­தங்­களை முன்­வைக்­க­வேண்­டி­யேற்­பட்­டது என்­ப­தனை இங்கு குறிப்­பி­டு­கின்றோம்.
இவ்­வாறு பல்­வேறு விட­யங்­களில் தனித்து செயற்­ப­டு­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் முயற்­சிப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலை­வ­ருடன் பிர­த­ம­ருக்கு முரண்­பா­டுகள் இருக்­கலாம். அதற்­காக அனைத்து டாக்­டர்­க­ளையும் விமர்­சிப்­பதை ஏற்றுக் கொள்ள முடி­யாது.
தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்­டு­மென்றும் எந்த தரப்­புக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத தேர்தல் முறையை கொண்­டு­வர வேண்டும் என்ற நோக்­கத்­துக்­கா­க­வுமே நாங்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் இந்த அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருக்­கின்றோம். ஆனால் அவ்­வாறு கடி­ன­மான சூழ்­நி­லை­க­ளுக்கு மத்­தியில் பிர­த­ம­ருக்கு நாங்கள் வழங்கும் ஆத­ரவு உரிய மதிப்பை பெறாமல் இருக்­கின்­றது.

இப்­ப­டியே சென்றால் தேசிய அர­சாங்­கத்தின் நோக்கம் நிறை­வே­றாமல் போய்­வி­டுமோ என்ற சந்­தேகம் தற்­போது எமக்கு ஏற்­ப­டு­கின்­றது. விசே­ட­மாக கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் நடை­பெற்ற பொது எதி­ர­ணியின் கூட்­டத்தில் மஹிந்­தவை ஆத­ரிப்­ப­தற்­காக மக்கள் வர­வில்லை. மாறாக ஐ.தே.க யின் எதிர்­பா­ளர்­களே அன்­றைய தினம் கொழும்பில் ஒன்­று­கூ­டினர் என்­பதை உறு­தி­யாக கூற­வேண்டும்.

எனவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தமது பய­ணத்தில் மாற்­றங்­களை செய்­வது மிகவும் அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் கடி­ன­மான தீர்­மா­ன­மொன்றை எடுப்­ப­தற்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு ஏற்­படும் என்­பதை தெ ளிவாகக் குறிப்­பி­டு­கின்றோம். நாங்கள் தற்­போ­தைய நிலை­மையில் ஆளுங்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் கலந்­கொள்­வ­தில்லை. இதுவும் தேசிய அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை வீழ்ச்­சி­யான விட­ய­மாகும்.

அந்­த­வ­கையில் கூறும்­போது சுதந்­திரக் கட்­சி­யினர் அர­சாங்­கத்தில் மகிழ்ச்­சி­யாக இல்லை என்­ப­தனை குறிப்­பிட முடியும். பிர­த­மரின் இந்த புறக்­க­ணிப்­புக்கள் தொட­ரு­மானால் நாங்கள் கடி­ன­மான தீர்­மானம் ஒன்றை எடுப்போம்.
நாங்கள் இந்த அர­சாங்­கத்­தை­விட்டு வில­கினால் அர­சாங்கம் கவிழ்ந்­து­விடும். ஆனால் அந்த யதார்த்த நிலையை ஏற்­றுக்­கொள்ளும் பக்­கு­வத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் இல்லை என்­பதே கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

விசே­ட­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியின் விட­யத்தில் மிகவும் பொறு­மை­யுடன் செயற்­ப­டு­கின்றார் என்­பதை கூற வேண்­டும.

கேள்வி ஜனா­தி­பதி பொறு­மை­யுடன் செயற்­ப­டு­வ­தாக ஏற் கூறு­கின்­றீர்கள் ?
பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறு­மை­யு­டன்தான் செயற்­ப­டு­கின்றார். உதா­ர­ண­மாக இந்­தி­யா­வு­ட­னான எட்கா உடன்­ப­டிக்கை தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு எதுவும் தெரி­யாது. அமைச்­ச­ர­வைக்கு வந்த பின்­னரே ஜனா­தி­ப­திக்கு அது தெரி­ய­வந்­தது. அவ்­வாறு பார்க்­கும்­போது ஜனா­தி­பதி மிகவும் பொறு­மை­யுடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். மக்கள் ஆணைக்கு மதிப்­ப­ளித்து ஜனா­தி­பதி செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார்.

ஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தொடர்ச்­சி­யாக எமது ஆத­ரவின் பெறு­ம­தி­யினைப் புரிந்து கொள்­ளாது தேசிய அர­சாங்­கத்­திற்குள் தனித்து இயங்க முயற்­சிக்­கின்­றனர். அவ்­வாறு அவர்கள் தனித்து இயங்க தொடர்ச்­சி­யாக முயற்­சிப்­பார்­க­ளாயின் நாங்­களும் அர­சியல் ரீதியில் கடி­ன­மான ஒரு முடி­வுக்கு செல்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம்.

இதே­வேளை கடந்த 17 ஆம் திகதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கொழும்பில் கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது அந்தக் கூட்­டத்­தை­யிட்டு நாங்கள் கவ­லைப்­ப­ட­வில்லை. உண்­மையில் அந்தக் கூட்டம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியே கவ­லைப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

காரணம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாலுக்கு சமமான பிரிவினரே அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். இந் நிலையில் சுதந்திரக் கட்சியின் தலையும் உடலும் சேர்ந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

எமது கட்சியின் 39 உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களில் யாரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவில்லை. கூட்டத்திற்கு தலைமைதாங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகூட மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியையே விமர்சித்தனர்.

எனவே இந்தக் கூட்டம் தொடர்பில் சிந்திக் வேண்டியது நாங்கள் அல்ல. மாறாக விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் வெ ளிச்சம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியே சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
« PREV
NEXT »

No comments