தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தும் ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் - நாள் 3
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று 3 ம் நாளாக கடுமையான குளிரிலும் , மழையிலும் இடைவிடாது தொடர்ந்தது . பயணத்தை மேற்கொண்ட இளையோர்கள் கடும் குளிரிலும் தாயக மக்களின் விடுதலைக்காகவும் , மாவீரர் கண்ட கனவுகளை நினைவாக்கவும் உறுதியுடன் ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டனர். இன்றைய நாளில் 72 KM தூரத்தை கடந்து Grandru எனும் நகரத்தில் நிறைவுபெற்றது. இன்றய தினம் மாலை 15 மணியளவில் luxemborg நகர மத்தியில் யேர்மன் நாட்டு மனிதநேய செயற்பாட்டாளர்கள் ஈருருளிப் பயணத்தை பொறுப்பேற்று தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள்.
இவ் போராட்டதில் அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டு எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெற இணைந்து கொள்வோம்.
No comments
Post a Comment