Latest News

March 19, 2016

பிரபாகரனை மே 19 கடைசியாக பார்த்தேன் முன்னால் போராளி கூறியது என்ன?
by admin - 0

இலங்கை இறுதி கட்ட போருக்கு பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்று போர் படை தளபதி பீல்ட் மாஸ்டர் பொன் சேக பாராளமன்றத்தில் அறிவித்தார் .

ஈரானில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த மகிந்த  ராஜபக்சே விமானத்தில் இருந்து இறங்கிய பின்னர் மண்ணை முத்தமிட்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முடிவடைந்து என்று உலகுக்கு உரக்க அறிவித்தார்.

பல்வேறு சந்தேகங்களால் பல்வேறு கோணங்களால் ஆராயப்பட்டது என்றும் ராஜபக்சே சொன்ன செய்தி அதிர்ச்சியும் ஆச்சர்யத்தையும் ஊருவக்கியது. அதற்கு அமைய கடந்த வாரம் பாராளமன்றத்தில் பீல்ட் மாஸ்டர் பொன் சேக போர் முடிந்த நேரத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்பதை அறிவித்தார் . மேலும் புலிகளிடம் இருந்து எடுத்த 150 கிலோ தங்கம் எங்கேபோனது என்று கேள்வி எழுப்பினார்.இதை விரும்பாத மகிந்த ராஜபக்சே பாராளமன்றத்தில் இருந்து வெளியேறி கேபினட் அறைக்கு சென்றார். இதை அவதானித்த  பொன் சேகா நீங்கள் எங்கே இருந்து பார்த்துகொண்டு இருக்கீர்கள் என்று எனக்கு தெரியும் நீங்கள் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று பாராளமன்ற பதிவு எட்டில் பதிவாகிருகிறது.

கடைசி நிமிடத்தில் என்ன ஆனது போர் முடிவடைந்த பின்னரும் தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா இன்றும் உயிருடன் உள்ளாரா என்பது கோடானுகோடி தமிழ் மக்களின் கேள்வியாகவே உள்ளது.

தமிழ் ஈழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 19ம் திகதி 2009 பொக்கனை என்னும் இடத்தில புளியமரத்தின் அடியில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களை சந்தித்துள்ளார். முகத்தில் முழு சவரம் செய்து இருந்த தலைவர் பிரபாகரன் அங்கு குழுமியிருந்த ஒருவரிடம் (சுஜீவன் பெயர் மாற்றபட்டுள்ளது) அழைத்து எதற்கு நமக்கெல்லாம் மீசை என்று கிண்டலாக பேசியுள்ளார். தன்னுடன் இருந்த போராளிகளுடன் பிரபாகரனும் தற்கொலை படைக்கான  ஆடை அணிந்து இருந்தார் என்றும் அதனால் அவரை உயிருடன் பிடித்து இருக்க சாத்தியம் இல்லை என்று கூறுகிறார் சுஜீவன்

போரில் தோற்றுவிட்டதே இதற்கான பதில் என்றே கருதவேண்டும் அதன் பின்னர் பிரபாகரன் எங்கே சென்றார் என்ன ஆனார் உயிருடன் உள்ளாரா என்னவானது என்று எல்லோருக்கும் கேள்விக்குறியாக உள்ளது.

ஆனால் சிங்கள ராணுவமும் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பிரபாகரனை கொன்றுவிட்டதாக கூறினார் அதுமட்டும் இல்லாமல் அவரின் சடலத்தை நமக்கு காண்பித்தனர் அதில் அவருக்கு தாடி மீசை இருந்தது இது பெரும் சர்ச்சை மட்டும் இல்லாமல் சந்தேகத்தையும் எழுப்புகிறது. நமக்கு கிடைத்த தகவலின் படி அதாவது கடைசி நேரத்தில் அவருடன் இருந்த சுஜீவன் நமக்குள் அளித்த தகவலின் படி பிரபாகரன் உயிருடன் உள்ளாரா?

பிரபாகரன் அப்படி போரில் இறந்து இருந்தால் ஏன் இன்னும் இலங்கை அரசாங்கம் அவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை இதற்கு ஆதராமாக சமீபத்தில் சிங்கள பத்திரிகை வெளிட்ட இன்னும் ஒரு சான்று பொட்டு அம்மான் உயிருடன் இருபதாக வெளியிட்டது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது மீண்டும் வருவாரா சூர்ய தேவன்.

« PREV
NEXT »

No comments