Latest News

February 16, 2016

நீண்ட நாள் இலக்கை, நீண்ட காலம் காத்திருந்து அழித்த புலிகள்.!! ஈழத்து துரோணர்.!!!
by admin - 0

நீண்ட நாள் இலக்கை, நீண்ட காலம்

காத்திருந்து அழித்த புலிகள்.!!

ஈழத்து துரோணர்.!!! 

தனிநாடு கேட்டுப்போராடிய தமிழர் சேனை, சிங்கள அரசுடனான யுத்தத்தில் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதில் பலவற்றை சமகாலத்தில் நான் கண்டு வந்துள்ளேன். அந்த வெற்றிகளின் போதெல்லாம் கிடைக்காத மனநிறைவு மேஜர்.ஜெனரல். ஜானகபெரேரா மீதான தாக்குதல் எனக்கு தந்திருந்தது. 

அந்தளவு தூரம் என்னை மட்டுமல்ல எம் மக்களையும், போராளிகளையும், சிங்கள மக்களின் ஒரு பகுதியினரும் வெறுப்புடன் பார்க்கவைத்த சிங்களத்தளபதி தான்  ஜானகபெரேரா. 

யார் இந்த ஜானகபெரேரா? ஈழத்தமிழரும், சிங்கள மக்களில் சிலரும், வெறுப்பதற்கு என்ன காரணம்.? அதற்கு கொஞ்சம் பின்னோக்கி போகவேண்டும்.

1966ம் ஆண்டு சிங்கள இராணுவத்தில் இணைந்து 2001ம் ஆண்டு வரை சேவையில் (35வருடங்கள்) இருந்தவர். இவர் ஐக்கியதேசிய கட்சியின் தீவிர அபிமானி. அதனாலோ என்னவோ பிரேமதாசவின் காலத்தில் மிகவும் செல்வாக்காணவர்களில் இவனும் மிக முக்கியமானவன்.1988,1989களில் சிங்கள மக்களின் (JVP ) ஆயுதபோராட்டத்தை ஆயுதம் கொண்டு நசுக்கியவர்களில் மிக முக்கியமானவன். 

இவர்களினால் அன்றைய நேரத்தில் ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டு, களணியாற்றில் வீசப்பட்டனர். அந்த போராட்டத்தில் பங்கு பற்றிய சிங்கள இளைஞர்களின் குடும்பங்களும் கொல்லப்பட்டு வீதிகளில் டயர் போட்டு கொளுத்தப்பட்டனர். 

அத்தோடு சிங்கள ஜனாதிபதி பிரேமதாசவின் நம்பிக்கையை பெற்று இராணுவத்தில் படிப்படியாக வளர்ந்திருந்தான். பல வருடங்கள் லெப்.ஜெனரல்.டென்சில் கொப்பெகடுவவுடன் பணியாற்றி போர் அனுபவங்களையும் பெற்றிருந்தான். 

ஆரம்பகாலங்களில் 6, 23,24 போன்ற (6 Brigade,24 Brigade, 23 Brigade)  சிங்களப்படையணிகளை  வழிநடத்தியிருந்தான். அதன் பின்னர் சிங்கள அரசின் அதி சிறப்பு தாக்குதல் பயிற்சி பெற்ற படையணிகளான 51,53 (SF) ஆகியவற்றை (51 Division,53Division) வழிநடத்தியிருந்தான். 

கொப்பேகடுவவின் மரணத்தின் பின் சிங்கள அரசின் நம்பிக்கையான தளபதியும் இவனே. இவனது வழிநடத்துதலில் தான் சிங்கள இராணுவம் அன்றைய நேரத்தில் யாழ்பாணத்தை கைப்பற்றி இருந்தது. இந்த சண்டைகளின் போது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஊடரப்பு தாக்குதல் (ஒபரேசன் இடிமுழக்கம்) ஒன்றை முறியடித்து எமக்கு பெரும் சேதத்தை உண்டு பண்ணியிருந்தான். 

இந்த தாக்குதலுக்காக புலிகள் ஒன்றுகூடியதை, ஒரு துரோகி மூலமாக தகவல் பெற்று, புலிகளின் இந்த ஊடறுப்பு தாக்குதல் அன்று இவனால் முறியடிக்கப்பட்டிருன்தது. யாழ்பாணத்தை கைப்பற்றியதும், தமிழர் போராட்டத்தில், புலிகளுக்கு உதவியவர்கள் என்று சந்தேகப்படும் அனைவரும் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். 

இவனின் காலத்திலேயே பாலியல் வல்லுறவுகளும், சித்திரவதைகளும் யாழில் எல்லை மீறி இருந்தது. காரணம் இதன் மூலம் மக்களை பயத்துடன் வைத்திருப்பதற்காக திட்டமிட்டு இவனால் இது மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு உளவியல் நடவடிக்கை. 

இதில் கிருசாந்தி என்னும் 16வயது சிறுமியை காவலரணில் வைத்து இராணுவத்தினர் கூட்டாக பாலியல் வல்லுறவிற்கு பின் கொலை செய்தனர். சிறுமியை தேடிச்சென்ற,  தாயையும், உறவினர் ஒருவரியும் இராணுவம் கொன்று, கிருசாந்தியுடன் சேர்த்து புதைத்திருந்தனர். 
இப்படி ஆயிரக்கணக்கில் செம்மணியில் எம் மக்களை கொன்று புதைத்தனர். 

இந்த காலத்தில் தான் மணலாற்றில் சிங்கள இராணுவமுகாம்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதலுக்கான பயிற்சிகள் நடந்தது. அந்த நேரத்தில் சில காடு சார்ந்த தேவைகளுக்காக பொதுமக்களில் இருந்து, சிலரை தெரிவு செய்து துணைப்படை ஒன்றை உருவாக்கினர் புலிகள். இவர்களில் சிலர் (மூன்று பேர் என்று நினைக்கின்றேன் )பின்னர் சிங்கள உளவாளிகளாக மாறி இருந்தனர். 

இவர்களின் துல்லியமான காட்டிக்கொடுப்பினால் நாம் எப்போது, எந்தப்பகுதியில் தாக்கப்போகின்றோம் என்று எதிரிக்கு தெரிந்திருந்தது. அதன் படி ஜனகபெரேராவின் திட்டமிடளுக்கு அமைய, அதி சக்தி கூடிய மின் விளக்குகளை அந்த பகுதிகளில் பொருத்திவைத்து, இராணுவத்தினர் பாதுகாப்பாக நிலையெடுத்திருந்தனர். 

இதை அறியாது உள்நுழைந்த எமது படையணிகள், திடீரென ஒளிர்ந்த கண்ணைப்பறிக்கும் மின்விளக்கினால் தடுமாறினார். இதனால் எமது தாக்குதல் திட்டம் பாழாகியது. ஆனபோதும் அந்த இக்கட்டிலும், எம் வீரரின்  எதிர்தாக்குதலின் மூலம் எதிரிக்கும் பெரும் சேதத்தை உண்டுபண்ணினர். 

இந்த தாக்குதலில் 129பெண் போராளிகள் உட்பட இருநூறு வரையான போராளிகளை நாம் இழந்திருந்தோம். அன்று அவர்களால் கைப்பற்றப்பட்ட அருபதற்கு மேற்பட்ட எமது போராளிகளின் உடலங்களை ஆடைகளைந்து, அவர்களது பிறப்புறுப்புகளை சிதைத்து ICRC ஊடாக எம்மிடம் எனுப்பி இருந்தான் இந்த ஜானகபெரேரா. 

இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தமைக்காக அந்த இடத்திற்கு, சிங்கள அரசு அவனது பெயரை (ஜனகபுர) சூட்டி அவனை கௌரவித்தது. 

இது நடந்து சில மாதங்களில் நாமும் பதிலுக்கு முல்லைத்தீவில் வைத்து அந்த பழியை தீர்த்து, ஆயிரக்கணக்கில் எதிரியின் உடலை ICRC மூலமாக கொடுத்தோம். ஆனால், அவன் வெட்கத்தில் அதை பெற மறுத்துவிட்டான். 

அதன் பின் அவன் யாழ்பாணத்தின் கட்டளை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று சென்றிருந்தான். அந்த நேரத்தில் இவனையும் இன்னும் சில இலக்குகளையும், இலக்கு வைத்து புலிகளின் உளவுத்துறை அணியொன்று யாழினுள் சென்றது. 

1997 - (7ம் மாதம் 10ம் திகதி என்று நினைக்கின்றேன்) அந்த நேரத்தில் சிங்கள அரசால் சத்ஜெய இராணுவ நடவடிக்கையை வழிநடத்துவதற்காக  மேஜர்.ஜெனரல்.பலேகல்லேவிடம் யாழின் பொறுப்பை கொடுத்துவிட்டு மாற்றலாகி செல்வதாக புலிகளின் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. 
அதற்கு முன் இவனை கொல்வதற்கே அந்த அணி அனுப்பப்பட்டது. 

அவன் மாற்றலாகி செல்லும் நாள் அன்று நல்லூர் கோவிலுக்கு பகல் 11.30வருவதாகவும், சிறப்பு பூஜை ஒன்றிற்கு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த தகவலுக்கு அமைய நல்லூர் முன் வீதியில் வலது பக்கத்தில் ஆட்கள் யாரும் அற்ற வீடொன்றில் இரவே அந்த புலிகளின் அணி உள்நுழைந்து, 10kg நிறையுடைய கிளைமோர் ஒன்றை மரத்தில் கட்டிவிட்டு அவனுக்காக காத்திருந்தது. 

கிட்டு பூங்காவிற்கு அருகிலே இருந்த முகாமில் தான் அவன் தங்குது  வழமை. ஆக அந்த வீதியால் தான் வருவான் என்று கணிப்பிட்டு காத்திருந்தனர். இவனது வருகையை சைகை மூலம் தெரிவிக்க புலிகளின் ஆதரவாளன் ஒருவரையும் ஒழுங்கு செய்திருந்தனர். தாக்குதல் நேரத்திற்கு முன்னதாக 11.15மணிக்கு அவரை வந்து, குறிப்பிட்ட இடத்தில்,இவர்களுக்கு தெரியும்படி  நின்று, இவன் வரும் போது சைகை செய்யும் படி அந்த போராளிகள் பணித்திருந்தனர். 

காரணம் நீண்ட நேரம் வீதியில் நின்றால் சந்தேகத்தில் கைது செய்யப்படுவார் என்பதால். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை 10.30மணிக்கே அவன் கோவிலுக்கு சென்றுவிட்டு அப்படியே பாலாலிக்கு சென்று கொழும்பு சென்று விட்டான். தேடிவந்த இலக்கில் ஒன்று தப்பி போக, ஏனையவை அந்த அணியால் அழிக்கப்பட்டது. 

அதன் பின் சத்ஜெய, ஜெயசிக்று போன்ற இராணுவ  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, புலிகளால் இவனது முதுகெலும்பு உடைக்கப்பட்டதும் வரலாறு. 
இப்படி பல தடவை இவன் இலக்கு வைக்கப்பட்ட போதும் மயிரிழையில் தப்பியிருந்தான். 

அதன் பின் 2001ம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சில வருடங்களின் பின், ஐக்கிய தேசிய கட்சியின் வடமத்தியமாகண அமைப்பாளராக பதவி பெற்று அரசியலினுள் பிரவேசித்ததினால் புலிகள் விழிப்படைந்தனர். 

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை பிடித்தால் நிச்சையம் இவனே பாதுகாப்பு அமைச்சராய் பொறுப்பெடுப்பான் என்பதை உணர்ந்த புலிகள் இவனை இலக்கு வைத்தனர். அதன் படி கபிலம்மானால் தயார்படுத்தி அனுப்பப்பட்ட கரும்புலி வீரன் வவுனியாவில் நிலையெடுத்தான்.  

அங்கிருந்து அனுராதபுரத்துக்கு சென்று தனது இலக்கிற்காக காத்திருந்தான். அனுராதபுரம் பழைய பஸ்நிலையத்திற்கு அருகாமையில், தனது புதிய அலுவலகத்தை திறந்து, குத்துவிளக்கை ஏற்றியபின் ஆசனத்தில் அமர்ந்திருந்த போது, இவர்களது கட்சியின் நிறமான பச்சை நிறத்தில் உடையணிந்திருந்த அந்த வீரன், இவனை மிக அருகில் நெருங்கியதும் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கவைத்தான். 

தமிழரின் புதைகுழிகளுக்கு சொந்தக்காரனும், பல நூறு போராளிகளின் சாவிற்கு காரணமான மேஜர்.ஜெனரல். ஜானகபெரேரா அன்று உடல் சிதறிப்பலியானான். அன்று புலிகள் தமது நீண்டநாள் பகையை தீர்த்துக்கொண்டனர். தமிழர் தேசம் பெருமை கொண்டது.!
மனநிறைவுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments