"ஆசிரிய ஆலோசகர்களது தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்தழைப்பு வழங்குங்கள்"
வடக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சங்கம் கோரிக்கை.
ஆசிரிய ஆலோசகர் சேவையை உருவாக்கக் கோரி இலங்கை முழுவதும் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையாக சட்டப்படி வேலை செய்தல் என்ற அடிப்படையில் துணைக்கற்பித்தலில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி எமது கோரிக்கை நிறைவேற ஆதரவழிக்குமாறு வடக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரை அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்த்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ,
ஏனைய தொழிற்சங்கங்கள் வாகன அனுமதிப்பத்திரம், வேறு வரப்பிரசாதங்களுக்காக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் ஆசிரிய ஆலோசகர்களுக்கென தனியான சேவையோ , சம்பளத்திட்டமோ இல்லாத நிலையில் அதனைக்கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான தடைகளை ஏற்படுத்துவதை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம். எமது போராட்டம் அரசியலமைப்பின் 14.1"உ" இல் குறிப்பிடப்பட்டுள்ள எமது அடிப்படை உரிமைகள், தொழிலின் ஸ்திரத்தன்மை என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான தொழிற்சங்க நடவடிக்கையாகும்.
2007ம் ஆண்டு ஏப்ரல் 30ம் திகதிய அமைச்சரவைத்தீர்மானம் மற்றும் 2013 ஒக்டோபர் 22 ம் திகதிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தீர்ப்பு என்பவற்றுக்கு அமைவாக எமது சேவையை உருவாக்க கோருவதற்கு இடையூறு மேற்கொள்வதானது நீதிமன்றத்தீர்ப்பிற்கு சவால் விடுவதாக அமையும் என்பதனையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
எனவே எமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு தங்களது பூரணமான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டக்கொள்கின்றோம். எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 27 ம் திகதி இலங்கையின் ஒன்பது மாகாணக்கல்வித் திணக்களங்களின் முன்பாகவும் பேரணி நடத்தி மகஜர் கையளிக்கப்பட்ட பின் ஆசிரிய ஆலோசகர்கள் அனைவரும் சட்டப்படி வேலை செய்தல் எனும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் மட்டும் சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கும் ஆசிரிய ஆலோசகர்கள் அனைவரும் தமது கடமைப் பட்டியலுக்கு அமைய வேலை செய்வதை உறுதிப்படுத்துமாறு கோரி அனுப்பப்பட்ட கடித்த்திற்கு அமைய வலயக்கல்விப்பணிப்பாளர்கள் செயற்பட்டு தொழிற்சங்க நடவடிக்கைகளைக் குழப்பும் முகமாக செயற்படும் நிலையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment