Latest News

February 19, 2016

சாவகச்சேரியில் அம்மனுக்கு தமிழீழ வரைபடத்தினை வைத்து அலங்காரம்
by admin - 0

யாழ்.சாவகச்சேரி பகுதியில் உள்ள அம்மன் ஆலய திருவிழாவின் போது அம்மனின் திருஉருவத்தின் பின்னணியில் தமிழீழ வரைபடத்தினை வைத்து அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

சாவகச்சேரி ஈழவாரியம்பதியுறை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் வியாழக்கிழமை இரவு நேர திருவிழாவில் அம்மனின் அலங்காரத்தின் போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் உள்ளடங்கிய தமிழீழ வரைபடத்தினை பின்னணியில் வைத்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவிழா இடம்பெற்றது.

தமிழீழம் என்றோ ஒருநாள் கிடைக்கும் அதை மீட்போம்  போராடியவர்களை மதிப்போம் அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை தமிழீழ சுதந்திர போராட்ட வீரர்கள் 
« PREV
NEXT »

No comments