வடமராட்சிக் கிழக்கு யா/அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் எட்டில் கல்வி பயிலும் செல்வி யோகலிங்கம் அனோஜா என்ற பாடசாலை மாணவி விளையாட்டுப் போட்டி பயிற்சியின் போது உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிக்கு நேற்றைய தினம் ஆசிரியர்கள் முன்னிலையில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட மயக்கத்தால் ஸ்தலத்திலேயே விழுந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் முதலுதவி அளித்தும் மயக்கம் தெளிவுறாத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் இரவு 11:30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
No comments
Post a Comment