சென்னை: தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., 8 பேர் இன்று தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் இழந்துள்ளார். ஆகையால் தற்போது தமிழகத்தில் எதிர்கட்சி அந்தஸ்து யாருக்கும் இல்லை என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தே.மு.தி.க.,வில் அதிருப்தி எம்எல்ஏ,க்களாக செயல்பட்டு வந்த மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், சுந்தரராஜன் , சாந்தி , சுரேஷ்குமார் , பாண்டியராஜன், அருள்அழகன், அருண்சுப்பிரமணியம் , ஆகியோர் இன்று தங்களின் பதவியை ராஜினாமாசெய்வதாக கடிதம் கொடுத்தனர். இதனை ஏற்று கொண்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்
மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சட்டசபை விதியின் படி போதிய எம்எல்ஏ க்கள் இந்த கட்சியில் இல்லாததால் இந்த கட்சி தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்துள்ளார். மேலும் அவருக்கு வழங்க வேண்டிய சலுகைகளும் இழந்தவராகிறார் .
தற்போது எதிர்கட்சி அந்தஸ்து கொடுத்து யாரையும் அங்கீகரிக்க இயலாது. எனவே தற்போதைய நிலைப்படி யாரும் எதிர்கட்சி இல்லை என்ற நிலையை உள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிகவில் மொத்தம் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளை பிடித்தது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 28 எம் எல்ஏக்களில் 8 பேர் அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்துள்ளனர் . இதனால் கட்சி எம்எல்ஏ, எண்ணிக்கை 20 ஆக குறைந்தது.

No comments
Post a Comment