Latest News

February 05, 2016

தனித்துப்போட்டி வீரத்தமிழன் சீமானுக்கு ஆதரவு அதிகரிப்பு -தமிழன் ஆட்சியை நோக்கிதமிழ்நாடு
by admin - 0

 234 தொகுதிகளிலும் விருப்ப மனு கொடுங்கள் என்று தொண்டர்களை உசுப்பேற்றிவிட்டு ஊர் ஊராக சைக்கிளில் பயணம் கிளம்பி விட்டார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். வலுவான கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராகி வரும் தமாகா, சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்றால் வெறும் 0.44% மக்கள் ஆதரவு மட்டுமே கிடைக்கும் என்று கூறுகிறது குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு.   


2021ல் ஆட்சியை பிடிப்போம் என்று கூறிய கையோடு இந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகி வரும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு 1.44% பேர் ஆதரவு அளிப்பதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இது வைகோவுக்கு உள்ள செல்வாக்கை விட அதிகம்.

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டசபைத் தேர்தலில் தனி, தனியாக போட்டியிட்டால் மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதுவும் நாம் தமிழருக்கு கிடைத்த ஆதரவை விட குறைவாகவே உள்ளது.மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக தனித்து போட்டியிட்டால் 1.35 சதவிகித மக்கள் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தனித்து போட்டியிட்டால் 1.11 சதவிகித மக்கள் வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ( இ. கம்யூனிஸ்ட் + மார்க்சிஸ்ட் ) வெறும் 1.21 சதவிகித மக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.



நாம் தமிழர் சீமானுக்கு வாக்களிப்போம் என்று 1.44 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இது மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட அதிகம் என்பதுதான் ஆச்சரியம்.ஜி. கே.வாசனின் தமாகாவிற்கு 0.44 சதவிகித மக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.இதர கட்சியினருக்கு ஆதரவு தருவோம் என்று 2.42 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சியினரை விடவும், தமாகாவை விடவும் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு சற்று கூடுதலாகவே உள்ளது என்கிறது இந்த கருத்துக்கணிப்பு. இந்த மக்கள் நலக் கூட்டணி தான் மாற்று அரசைத் தரப் போகிறதாம்.



« PREV
NEXT »

No comments