வட மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல் குரே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநராக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டு மேல் மாகாண சபை உறுப்பினராக தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரெஜினோல்ட் குரே, பிரதி அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் அரசியலில் அங்கம் வகித்து வந்தார். அத்தோடு, மேல் மாகாண சபையின் முதலமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.
வடக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிவந்த எச்.ஏ.ஜி.எஸ்.பளிஹக்கார, அண்மையில் தமது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தினை அடுத்தே, ரெஜினோல்ட் குரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment