மக்களின் சம்பளப் பிரச்சனைகள் பற்றிய நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாத பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் சம்பள அதிகர்பபு என்றால் படையெடுப்பார்கள் என மக்கள் ஆதங்கம்.
பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் மக்களால் கொண்டு வரப்பட்ட நல்லாட்சி அரசாங்கமும் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் புறக்கணித்துக் காலங்கடத்திக் கண்மூடி இருந்து வருவதாகப் பாதிக்கப்பட்ட மக்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தால் தீர்க்கப்படக்கூடிய மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் காலந்தாழ்த்தப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு உதாசீனம் செய்யப்பட்டு வருவதாகவும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின்படி மக்களின் உழைப்பைச் சுரண்டி அநீதி இழைப்பதில்லை, கடந்த கால அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கப்படும், ஊழல் மோசடிகள் ஒழிக்கப்படும் என்று விளம்பரப்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் ஈவிரக்கமற்ற முறையில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் நிகழ்வுகளே வெளிப்படையாக இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவார்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் உழைப்பைச் சுரண்டப்படும் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கக்கூட ஆட்களில்லாமல் ஓடி ஒழிந்துள்ளார்கள் இதனைக் கடந்த 11.02.2016 ஆம் திகதி வியாழக் கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தொழிலாளர்களின் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத் திருத்தம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இவற்றை மிகவும் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.
அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயம் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த விடயத்திற்குத் தொடர்பான நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஜோன் செனவிரட்ன அதில் கலந்துகொள்ளவில்லை. இதனால் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தனது தனது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தீர்க்கப்படக்கூடிய சிறிய விடயத்தைக்கூட கருத்திலெடுக்காதவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கப்போகின்றார்கள் என்றும் தனது கோபத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தார்.
தொழிலாளர் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத் திருத்தம் தொடர்பான் விவாதத்தின்போது மேலும் தனது கருத்தைத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களால் மலையக மக்களின் சம்பளப் பிரச்சனைகள், ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் சுரண்டப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது, தனியார்துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சனைகள் தொடர்பில் தனது கருத்துக்களை வெளியிட்டு அவை தொழிலாளர்களின் வாழ்வியலுக்கான பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் எனவும் தனது கருத்தை தெரிவித்து வலியுறுத்தியிருந்தார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டு அவர்களின் வாழ்வியல் சிதைத்தழிக்கப்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக மலையகத் தோட்டப் புறங்களில் வாழும் மக்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி படிக்காதவர்களாக இல்லாது விட்டாலும் சரி அவர்கள் ஏமாற்றப்பட்டு அவர்களின் உழைப்பை அரசு சரண்டி வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது. அவர்களின் உழைப்புக்கேற்ற சம்பளம் வழங்கப்படாமல் அவர்களின் உழைப்புச் சரண்டப்பட்டு சம்பளம் கொள்ளையடிக்கப்படுகின்றது.
பல்வேறுபட்ட துன்பங்களுக்கு மத்தியில் தோட்டங்களில் வேலைசெய்யும் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான சம்பளத்தை அதிகரித்துத் தருமாறு நீண்டகாலமாக் கோரிப் போராட்டங்களில் ஈடுபடுகின்றபோதிலும் அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை.
மற்றும் தோட்டங்களில் கஸ்டப்பட்டு வேலை செய்தவர்களது படித்த பிள்ளைகளையும் அரசாங்கம் ஏமாற்றி அரச ஊழியர்களாக நியமனம் வழங்கியதாகக் கூறி அவர்களுக்கு ஆசிரிய உதவியாளர்கள் என்ற விதிமுறைகளுக்கு முரணான நியமனங்களை வழங்கி அவர்களுக்கு மாதச் சம்பளமாக வெறும் 6000 ரூபா சம்பளம் மட்டும் வழங்கப்பட்டு அவர்களின் உழைப்பையும் அரசு சுரண்டி வருகின்றமையானது அவர்களுக்குக் கொடுமையிலும் கொடுமையாகத் தெரியவில்லையா எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிநிற்கின்ற அதேவேளை அரசியல்வாதிகளான அமைச்சர்களின் சலுகைகள், சம்பளம் குறைக்கப்படுவது என்றால் பெரிய போராட்டங்களே நடத்துவார்கள் எனவும் ஆதங்கப்படுகின்றார்கள்.
இது மக்களுக்கான நல்லாட்சியா அரசியல்வாதிகளின் நலன்களுக்கான நல்லாட்சியா எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
No comments
Post a Comment