அரசியல் கைதிகள் விடயத்தில் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக அமையும் என வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹூசைன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
சிறையில் வாடும் இளைஞர்கள் விடயம் தொடர்பில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை விட அவர்களின் வழக்கு விசாரணைகளை சரியாகவும், துரிதமாகவும் முன்னெடுத்து அவர்களை விடுதலை செய்வது சரியானதாக அமையும் என அவர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.
அரசுக்கு அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களைக் கூறி கைதிகள் விடுதலை தொடர்பில் செயற்படுமாறு நான் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார். ஆணையாளரின் வருகையானது சிறையில் வாடும் இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது.
இதன்போது காணாமல் போனவர்களின் விபரங்கள் மற்றும் சில முக்கியமான 4000இற்கு மேற்பட்ட முறைப்பாட்டு ஆவணங்கள் முதலமைச்சரினால் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறன ஒரு மனித உரிமைகள் ஆணையாளர் பாதிக்கபட்ட தமிழர் தாயகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மக்களின் நிலமைகள் தொடர்பில் அறிவது எமக்கு நெகிழ்சி அழிக்கிறது. ஆணையாளரைச் சந்திப்பதற்கு காணாமல் போனவர்களின் உறவுகளில் இருந்து 5 பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார்.
No comments
Post a Comment